தேனி மாவட்டத்தில் பழங்கால எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் உள்ள ஞானம்மாள் கோவில் சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில் ஆகும். மருதநாயகம் என்ற கான்சாகிபு கொடைக்கானல் சாலையை வடிவமைத்த பகுதியான அம்சாபுரம் இப்பகுதியில்தான் உள்ளது. இக்கோயிலில் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.

பாண்டிய மன்னராலும் பராமரிக்கப்பட்டு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்ட திருக்கோயில். போதிய பராமரிப்பில்லாததால் இத்திருக்கோயிலின் கல்வெட்டுகள் அழிய ஆரம்பித்தன. பல கல்வெட்டுகள் அழிக்கப்பட்டும் விட்டன. சமூக விரோதிகளால் சிதைக்கப்படும் திருக்கோயிலாக ஞானம்மாள் கோவில் உள்ளது. [1]

தேனிமாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள குள்ளப்புரத்தில் அருள்மிகு உத்தண்ட சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இக்கோவிலில் பழமையான பிராமி எழுத்துக்களும், வட்ட வடிவ எழுத்துக்களும் காணப்படுகின்றன.

இந்தியாவின் மிகப்பழைமையான நடுகற்கள்[தொகு]

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள புலிமான்கோம்பையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்கள் இறந்த உடன் புதைப்பது வழக்கம். புதைத்த பகுதியின்மேல் நடுகற்களை ஊன்றுவார்கள். அந்த நடுகற்களில் ஏராளமான தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இவை பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவை.இவை இந்தியாவின் மிகப்பழைமையான நடுகற்களாக அறியப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-30. பார்க்கப்பட்ட நாள் 2014-09-20.
  2. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/natukal.htm

வெளியிணைப்புகள்[தொகு]