தெலுங்குத் தமிழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

தமிழ்நாட்டில் விஜய நகர ஆட்சியாளர்களை முன்னிறுத்தி ஆண்ட நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் (1564 - 16??) தெலுங்கு மொழியுடனும், தெலுங்கர்களுடனுமான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, மொழித் தொடர்புகள் வலுப்பெற்றன. தெலுங்கு மொழிக்கும் தெலுங்கர்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் இத்தகைய இறுகிய உறவையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயலை தெலுங்குத் தமிழியல் எனலாம்.

நாயக்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஆதரவு பெற்று தமிழும் அதன் பரிமாறுதல்களை உள்வாங்கியது. தமிழிசை பாடல்களில் தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்ற காலமாகவும் நாயக்கர் காலத்தைக் கருதலாம்.

சில சொற்கள்[தொகு]

தமிழ் --- தெலுங்கு

  • போட்டி - போட்டி
  • சேலை(சீலை) - சீர
  • சேலையைக் கட்டு - சீர கட்டு
  • முதலான - மொதலைனவி
  • விண்ணப்பம் - விந்நப்பமு
  • காணிக்கை - காநுக்க
  • தவறாது(தப்பாது) - தப்பகுண்டா
  • இரம்பம் - ரம்பமு
  • மஞ்சம்(படுக்கை) - மஞ்ச்சமு
  • பலகை - பலக்க
  • நகை(அணிகலன்)- நகலு
  • ஏற்றம்(நீர் இறைக்க)- ஏத்தம்
  • புகை - பொக
  • வண்டி - பண்டி
  • நிலையம் - நிலயமு
  • இர‌வி - ர‌வி
  • வலை - வல
  • இல்(இல்லம்) - இல்லு
  • எலி - எலுக
  • சொல்(செப்பு) - செப்பு
  • தின் - தினு
  • ஈ(கொடு) - இவ்வு
  • பெருகு(பன்மடங்காதல்) - பெருகு
  • இல்லை - லேது
  • இருக்காது - உண்டது

(கிடையாது, முடியாது ஆகிய பொருட்க‌ளிலும் ‘காது’ - பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து)

  • அல்ல - காது
  • இய‌ந்திர‌ம் - யந்த்ரமு
  • கொஞ்ச‌ம் - கொஞ்ச‌ம்
  • பாத்திர‌ம் - பாத்ரமு
  • ச‌ங்கு - ச‌ங்க்க‌மு
  • கோழி - கோடி
  • காடு(அட‌வி) - அட‌வி

(ம‌ர‌ங்க‌ள் அட‌ர்ந்து காண‌ப்ப‌டுவ‌தால் அட‌வி என்றொரு பெய‌ர் காட்டுக்கு உண்டு. திருநெல்வேலி மாவ‌ட்ட‌த்தில் அட‌விந‌யினார்குள‌ம் என்றொரு ஊர் உள்ள‌து.)

  • இங்கே - இக்கட
  • அங்கே - அக்கட
  • எங்கே - எக்கட
  • விலை - வெல
  • எவ்வளவு - எந்த்த

(எவ்வளவு என்பது எந்த + அளவு எனப்பிரியும். அதன் முன் பாதியான 'எந்த' என்பது 'எந்தா' எனத் தெலுங்கில் வழங்கப்படுகிறது)

  • சின்ன - சின்ன
  • சட்டை - சொக்கா
  • பால் - பாலு
  • இன்னும் - இங்க்க
  • நெய் - நெய்யி
  • மிக(சால) - சால
  • கப்பல்(ஓடம்) - ஓட
  • செய் - சேய்யி
  • போ - போ, வெள்ளு
  • ஏலக்காய் - ஏலக்காய, ஏலக்கி, இலாச்சி
  • முருங்கைக்காய் - முனகக்காய
  • வெண்டைக்காய் - பெண்டக்காய
  • வெங்காயம்(உள்ளி) - உள்ளி கட்டலு
  • தேங்காய் /கொப்பரி காய- டெங்காய
  • பப்பாளி - பப்பாயா

உடல் உறுப்புகள்[தொகு]

தமிழ் - தெலுங்கு

  • தலை - தல
  • கண் - கந்நு
  • காது(செவி) - செவி
  • மூக்கு - முக்கு
  • கை - செய்யி
  • விர‌ல் - வேலு
  • கால் - காலு
  • தொடை - தொட
  • நகம் - நக்கமு (வழக்கத்தில் 'கோரு' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது)
  • நெற்றி (நுதல்) - நுதுரு (பேதை நுதல் திருக்குறளில்)
  • சடை(முடி) - ஜட("jadaa")

மற்ற சொற்கள்[தொகு]

  • துரை
  • ராயசம்
  • கட்டடம்
  • கலப்படம்
  • உருண்டை
  • சொக்கா
  • பட்டறை
  • ரவிக்கை

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • சு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்குத்_தமிழியல்&oldid=3403027" இலிருந்து மீள்விக்கப்பட்டது