சமசுகிருத தமிழியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமசுகிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இருக்கும் தொடர்பு ஆதியானது, நெருக்கமானது, மிக முக்கியமானது. சமசுகிருதத்தை தமது பண்பாட்டு மூலமாக பார்க்கும் வட இந்திய மக்களுக்கும் தமிழ் மொழியை தமது அடையாளமாக கொள்ளும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட பலக்கிய பன்முக உறவாடல் இருந்துவருகின்றது. தமிழ் சமசுகிருத மொழிகளுக்கும் அவற்றை சார்ந்த மக்களுக்கும் இருக்கும் உறவை முக்கியமாக ஆயும் இயலை சமசுகிருத தமிழியல் எனலாம்.