தென்காசி பெரிய லாலா கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய லாலா கடை என்பது தென்காசி நகரிலுள்ள ஒரு இனிப்பு மற்றும் கார வகை பலகார கடையாகும். இக்கடையின் பெயர் கிருஷ்ண விலாஸ் என்பதாகும். இக்கடை தென்காசியில் பெரிய பலகார கடை என்பதால் பெரிய லாலா கடை என்றே அழைக்கின்றனர்.

வரலாறு[தொகு]

1904-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் கிருஷ்ண சிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்களின் உறவினர்கள் ஆவர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலப்போக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கிய இவர்களின் கோதுமை அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாக சுவையாக இருந்ததால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. தற்போது இக்கடையை கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான சுப்பு சிங், மோகன் சிங் நடத்தி வருகின்றனர். இக்குடும்பத்தினர் அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றாறின் தண்ணீரே என்று கருதுகின்றனர்.

மூலம்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_பெரிய_லாலா_கடை&oldid=1663591" இலிருந்து மீள்விக்கப்பட்டது