துளுவ எப்பார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளுவ எப்பார்கள் (Tuluva Hebbars) என்பவர்கள் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த துளு மொழி பேசும் பிராமண சமூகமாகும். "எப்பa" என்ற பெயர் கன்னடத்திலிருந்து வந்தது.

தோற்றம்[தொகு]

இந்தச் சமூகம் முதலில் கர்நாடகாவின் தென் கன்னட மாவட்டம் மாவட்டத்தின் புத்தூர் என்ற ஊரைச் சேர்ந்தது. இவர்களின் தாய்மொழி இந்தியாவின் திராவிட மொழிகளில் ஒன்றான துளு ஆகும் . இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் நிதித் துறையில் நிறைய பிரதிநிதித்துவமும், குறிப்பிடத்தக்க படைப்புகளும் உள்ளன. இவர்கள் ஸ்தானிகா பிராமணர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். கொல்லூரைச் சேர்ந்த இவர்கள் கபினாலேக்கு குடிபெயர்ந்து பின்னர் தென் கன்னடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவினர் என்று சிலர் கருதுகின்றனர்.

நிலை[தொகு]

இவர்கள் கிராம அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும், நிதி ஆலோசகர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் இவர்களில் பலர் கேரளா மற்றும் கர்நாடக கோவில்களில் வழிபாடு செய்கிறார்கள். இவர்களில் சிலர் வேளாண்மையிலும், பாம்பு கடிக்கு சிகிச்சையிலும் ஈடுபட்டுள்ளனர். சில குடும்பங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளன. இவர்களில் சிலர் நிருத்தத்திலும் ஈடுபட்டனர்

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

சமீபத்திய காலங்களில், மும்பையில் வசிக்கும் இவர்களில் பெரும்ம்பாலானவர்கள் உடுப்பி மாவட்டத்தில் கட்டிங்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மும்பையின் அசல் உடுப்பி உணவக உரிமையாளரான கே. கிருட்டிணா எப்பார், கே. சீனிவாச எப்பர், சங்கர்நாராயணன் எப்பர், கர்நாடக தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்பித்த மரியாதைக்குரிய பொறியியலாளரும், பேராசிரியருமான கே.எம். எப்பார் போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

வேதம்[தொகு]

இவர்கள் சாம வேதத்தைச் சேர்ந்தவர்கள், சாம வேதத்தை ஓதுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளுவ_எப்பார்கள்&oldid=3025649" இலிருந்து மீள்விக்கப்பட்டது