தி பாய் ஊ ஆர்னெசுடு தி விண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Boy Who Harnessed the Wind
இயக்கம்Chiwetel Ejiofor
தயாரிப்புAndrea Calderwood
Gail Egan
திரைக்கதைChiwetel Ejiofor
இசைAntônio Pinto (composer)
நடிப்புMaxwell Simba
Chiwetel Ejiofor
Lily Banda
ஒளிப்பதிவுDick Pope (cinematographer)
படத்தொகுப்புValerio Bonelli
கலையகம்நெற்ஃபிளிக்சு
Participant Media
BBC Films
British Film Institute
Potboiler Productions
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு25 சனவரி 2019 (2019-01-25)(2019 Sundance Film Festival)
Sundance
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
Malawi
மொழிஆங்கிலம்
நியாஞ்ச மொழி

தி பாய் ஊ ஆர்னெசுடு தி விண்டு (The Boy Who Harnessed the Wind) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்பிரிக்க நாடகத் திரைப்படமாகும், “காற்றைப் பயன்படுத்திய சிறுவன்” என்பது இத்தலைப்பின் பொருளாகும். இது சிவெட்டல் எசியோஃபோர் இயக்குனராக அறிமுகமாகி, இயக்கி, நடித்துள்ளார். வில்லியம் கம்க்வாம்பா, பிரையன் மீலர் ஆகியோரை அடிப்படையாகக் கொண்ட படமிது. இப்படம், 2019 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் பிரீமியர்சு பிரிவில் திரையிடப்பட்டது. 1 மார்ச் 2019 அன்று நெற்ஃபிளிக்சு இல் உலகின் பிற இடங்களுக்காக வெளியானது. 92வது அகாடமி விருதுகளில் இடம்பெற்று, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரித்தானிய நுழைவாக, இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், பரிந்துரைக்கப்படவில்லை.[1] இப்படம் எசியோஃபோரின் இயக்கத்திற்க்கும், நடிப்புக்கும் பாராட்டுக்களுடன், பரவலான நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

கதைக்களம்[தொகு]

வில்லியம் கம்குவாம்பா

வறட்சியும், வறுமையும் அதிகமுள்ள ஒரு ஆப்பிரிக்கச் சிற்றூரில் வாழும் சிறுவன் தனது விடாமுயற்சியால்ஆப்பிரிக்கச் நிலத்தடி நீரை, தனது வாழ்விடத்தில் காற்றுச் சுழலி கொண்டு வந்து, பிறரின் வாழ்வில் உயிர்நீரைக் கொடுப்பதே கதையின் வேராகும். அக்காற்று ஆலையை, தன் வாழ்விடத்தைச் சுற்றியுள்ள குப்பைக் கூளங்களில் இருந்து எடுத்து அமைக்கும் முயற்சியில், அச்சிறுவன் படும் அவமதிப்புகளும், இறுதியில் அவமதித்தவர்களின் உதவிகளோடு அமைக்கிறான். உண்மையில் இதனை செய்து காட்டியவர், மலாவி நாட்டைச் சார்ந்த வில்லியம் கம்குவாம்பா (William Kamkwamba[2]) ஆவார்.

மதிப்பீடு[தொகு]

இராட்டன் டொமேட்டோசு மதிப்பாய்வில், திரைப்படம் 64 மதிப்புரைகளின் அடிப்படையில், 86% ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. சராசரி மதிப்பீடு 7.3/10 ஆகும். இணையதளத்தின் விமர்சன ஒருமித்த கருத்துப்படி, " தி பாய் ஹூ ஹார்னெஸ்டு தி விண்ட், அறிமுக இயக்குனரான சிவெடெல் எசியோஃபோரிடமிருந்து வலுவான நடிப்பும், பிற ஈர்க்கக்கூடிய வேலைகள் மூலம், அதன் கணிக்கத்தக்க மேம்படுத்திய மதிப்பையும் பெறுகிறது.[3] மெட்டாக்ரிட்டிக்கில், 18 விமர்சகர்களின் அடிப்படையில் 100க்கு 68 என்ற சராசரி மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இது "பொதுவாக சாதகமான விமர்சனங்களை" குறிக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "93 Countries in Competition for 2019 International Feature Film Oscar". Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2024.
  2. "TED Speaker: William Kamkwamba — Inventor". TED. Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 October 2020.
  3. "The Boy Who Harnessed the Wind (2019)". அழுகிய தக்காளிகள். Fandango Media. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2024.
  4. "The Boy Who Harnessed the Wind". Metacritic. CBS Interactive Inc. 2019. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]