திறந்த மூலநிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறந்த மூல நிரல் என்பது அபிவிருத்தி, மேம்படுத்தல்கள் மூலமாக இறுதித் தயாரிப்பின் தரத்தை உயர்த்துவதாகும். இணையத்தின் வளர்ச்சியால் பரந்துபட்ட தயாரிப்பு முறைகளையும், தொடர்பாடல் முறைகளையும், சமுதாயத் தோடான உறவுகளையும் பலப் படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திறந்த மூலநிரல் மென்பொருட்களே பெரும்பாலும் வெளிவந்தன.

வர்த்தக ரீதியிலான மென்பொருட் தயாரிப்புப் போன்றல்லாது திறந்த மூல நிரல் மாதிரிகள் வேறு வேறான அணுகுமுறைகளைக் கையாளகின்றன

வரலாறு[தொகு]

நெட்ஸ்கேப் நிறுவனத்தினர் ஜனவரி 1998 இல் அவர்களின் உலாவியான நவிகேட்டரின் மூலநிரல்களை வெளியிட்டனர். எனினும் வெளிவிடும் போது இலவசம் என்னும் சொல்லின் ஆங்கிலப் பதத்தில் உள்ள குழப்பத்தால் அவர்கள் திறந்த என்னும் பொருள் படும் Open என்னும் சொல்லைத் தெர்ந்தெடுத்து அவர்களின் மொசிலா என்னும் பெயருடன் திறந்த மூல நிரலை வெளிவிட்டனர்.

இதுவே திறந்த மூல நிரலின் பிறப்பு எனப் பெரும்பாலும் கருதப் படுகின்றது. எவ்வாறாயினும் இதற்கு முன்னரே இன்றைய வையக வலையின் முன்னோடியான மேம்படுத்தப்பட்ட ஆய்வுத் திட்ட அமைப்புகளின் வலையமைப்பில் ARPANET கருத்துக்களைக் கேட்டறிதல் Request For Comments என்னும் முறை பயன்படுத்தப் பட்டது.

சந்தை[தொகு]

திறந்த மூலநிரல்கள் மூலம் மென்பொருட்கள் மாத்திரம் அன்றிப் பல்வேறு சமுதாய, அரசியல் மற்றும் பல்வேறு கல்வி முறைகள் மாற்றமடைந்தன. லினக்ஸ் இயங்கு தளத்தின் ஸ்தாபகரான லினஸ் ரோர்வால்ட்ஸ் எதிர் காலத்தில் எல்லாமே திறந்த மூல நிரல்களாய் இருக்கும் என்றார்.

திறந்த மூல நிரல்களால் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவை அதிகரித்தன. இதனால் கட்டற்ற கலைக்கழஞ்சியமான விக்கிப்பீடியா உயிரியற்தொழில்நுட்பம் Biotechnology CAMBIA ஊடான ஆய்வுகளும் வெளிவந்தன. திறந்த மூல நிரற் தத்துவங்கள் பொதுவான உருவாக்கங்கள் என ஆங்கிலத்தில் பொருள்படும் Creative Commons இலும் பயன்படுத்தப் படுகின்றது. இது பொதுவாக எல்லோருமே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழ மொழிக்கமைய கூட்டு முயற்சிகளிலேயே பயன்படுகின்றது.

விவசாயம்[தொகு]

  • குடிவகைகள்
    • திறந்த கோலா OpenCola. இது திறந்த மூலநிரலினால் கவரப்பட்ட திட்டமாகும். கோலா மென்பொருள் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்பு யுக்திகளை மிகவும் இரகசியமாகவே வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் இணையத்தினூடாக கோலா போன்ற பானத்தின் தயாரிப்புமுறைகளை இணையத்தில் பிரசுரித்துள்ளனர்.
    • பியர்: பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பியர் தயாரிப்பு முறைகளை இணையத்தில் பிரசுரித்துள்ளனர்.

சுகாதாரம்[தொகு]

  • மருத்துவம்

மருந்து வகைகள்: மருந்து வகைகளைத் தயாரிப்பதில் திறந்த மூல நிரல்களைத் தயாரிப்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.

தொழில் நுட்பம்[தொகு]

  • கணினி மென்பொருள்
    • திறந்த மூல நிரல் மென்பொருள்

மென்பொருட்களின் மூல நிரல்கள் பொதுவாக இணையத்தில் பிரசுரிக்கப் பட்டு யாராலும் பிரதியெடுக்க அனுமதிக்கப் பட்டு, மாற்றம் செய்யவோ, மீள்விநியோகம் செய்யவோ எதுவித கட்டணமோ கட்டுப்பாடோ இன்றி அனுமதி வழங்குவதாகும். திறந்த மூல நிரல்கள் சமுதாயத்தின் கூட்டு முயற்சியாலேயே விருத்தி செய்யப் பட்டு வருகின்றது. இந்தச் சமுதாயமானது தன்னியான ஓர் நிரலாக்கரையோ அல்லது மிகவும் பெரிய நிறுவனத்திலோ இருக்கும்.

    • திறந்த வன்பொருட்கள்

வன்பொருளின் அமைப்புக்கள் யாவும் ஓர் மென்பொருள் வடிவத்தில் இருக்கும் இவை அநேகமாக இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு எவராலும் இதைப் பெறக்கூடியதாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_மூலநிரல்&oldid=2718645" இலிருந்து மீள்விக்கப்பட்டது