திருச்சாட்டுக்குளம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சாட்டுக்குளம் மகாதேவர் கோயில்

திருச்சாட்டுக்குளம் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் பனவல்லி தீவில் உள்ள வேம்பநாடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். [1] [2] கரப்புரம் அரசாட்சியைச் சேர்ந்த மூன்று முக்கியமான சிவன் கோயிலில் இதுவும் ஒன்றாகும். பிற இரு கோயில்கள் வேலோர்வட்டம் மகாதேவர் கோயில், நல்பதனீஸ்வரம் மகாதேவர் கோயில் ஆகியவையாகும்.[3] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

கட்டிடக்கலை[தொகு]

சிவன் கிழக்கு நோக்கி உள்ளார். கேரள திராவிடியன் கட்டடப்பாணியில் இக்கோயில் உள்ளது. அழகான மர சிற்பங்களைக் கொண்டுள்ளது. கிழக்கு கோபுரத்தை ஒட்டி ஒரு பெரிய தந்த கோபுரம் உள்ளது. தந்த கோபுரத்தின் அளவைப் பார்க்கும் போது, கோபுரம் மிகவும் சிறியதாக உள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு மூலையில் கோயில் குளம் உள்ளது.

நாலம்பலத்தில் கணபதியும் பகவதியும் உள்ளனர். அண்மையில் 1978 ஆம் ஆண்டில் பகவதி சிற்பம் அமைக்கப்பட்டது. நாகயக்சியின் சிலை வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. கோயிலின் கருவறை எண்ணற்ற சிற்பங்களால் உள்ளன. அற்புதமான மரச் சிற்பங்களுக்காக இக்கோயில் புகழ்பெற்றதாகும். கருவறை இரண்டு வகையான செவ்வகங்களால் ஆனதாகும். அதில் செப்புத்தகடுகள் வேயப்பட்டுள்ளன.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temples of lord shiva-Chittukulam Thrichattukulam Mahadeva Temple".
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
  3. "108 Shiva Temples in Kerala".
  4. "Temples in India - Sree Mahadevar Temple Thrichattukulam".