திரிபிரங்கோடு சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபிரங்கோடு சிவன் கோயில்
மூலவர் கருவறை

திரிபிரங்கோடு சிவன் கோயில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள திரிபிரங்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். [1]இந்த பழமையான கோயில் திருநாவாய ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 5 கி.மீ.தொலைவிலும், திரூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தெலைவிலும் உள்ளது. வடக்குக் கேரளாவில் அமைநதுள்ள மிக முக்கியமான இந்து புனித யாத்திரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

கோயில் வளாகம்[தொகு]

கேரளாவில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இது 'வெள்ளோட்டு பாதம்' எனப்படும் வயல்வெளிகளின் ஓரத்தில் மேற்கு நோக்கி இக்கோயில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. கோயிலின் முன்புறம் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள மற்றொரு பெரிய மரம் சிவபெருமானுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிற எலஞ்சி மரம் ஆகும். கோயில் வளாகத்தில் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்ப்டுகின்ற பேலை (பில்வம்/கூவலம்) மரம் உள்ளது. இங்கள்ள மூலவரான சிவலிங்கம், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி உள்ளது. இடதுபுறம் பார்வதி சன்னதி உள்ளது. இதைத்தவிர மேலும் நான்கு சன்னதிகள் இங்கு உள்ளன. ஒன்று 'மூலஸ்தானம்' எனப்படுகின்ற சிவன் உறையும் இடமாகும். மற்ற மூன்று சன்னதிகள் யமனைக் கொல்ல சிவன் எடுத்த மூன்று படி நிலைகளைக் குறிக்கிறது.

கோயிலைச் சுற்றி ஐந்து குளங்கள் உள்ளன, அவற்றில் மூன்று கோயில் வளாகத்திலேயே காணப்படுகின்றன. கரணயில் கோயிலுக்கு முன்னால் காணப்படுகின்ற குளம் சிவன் உறையும் இடம் என்ற வகையில் உள்ளது. அதற்கு மிக அருகில் மேலும் இரண்டு குளங்கள் உள்ளன. கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள குளம், யமனைக் கொன்ற பின்னர் சிவன் தன் திரிசூலத்தைக் கழுவிய இடமாகக் கருதப்படுகிறது. கோயில் வளாகத்திற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு பெரிய குளம் பொது பயன்பாட்டிற்காக. நீச்சல் கற்றுக்கொள்வது, விலங்குகளை கழுவுதல் போன்றவை என்ற வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு பக்தர்கள் இங்கு குளித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த கோயில் முக்கியக்கூறாக இங்கு காணப்படுகின்ற மூன்று மூலவர் சன்திகளைக் கூறலாம்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]