திப்பிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்பிலி (Piper Longum) என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், 3 வருடங்களுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய்,தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களுக்குப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: திப்பிலி |