தினேஷ் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேஷ் சிங்
சட்டமன்ற உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
2007 - 2022
முன்னையவர்இரகுநாத் சகாய் பூரி
பின்னவர்நரேஷ் புரி
தொகுதிசுஜான்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூன் 1962 (1962-06-17) (அகவை 61)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பங்கோலி, பட்டான்கோட், பஞ்சாப் இந்தியா

தினேஷ் சிங் (Dinesh Singh)(புனைபெயர் பாபு ) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சுஜன்பூரின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் பஞ்சாப் சட்டமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் ஆவார்[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிங் 17 சூன் 1962-ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் பீம் சிங் ஆவார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சிங் அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத்தின் (பதான்கோட்) பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 2007-ல் சுஜன்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2012-ல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 20 மார்ச் 2012 முதல், பஞ்சாப் சட்டப் பேரவையின் துணைச் சபாநாயகராக இருந்து வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "BIO-DATA OF SH. DINESH SINGH". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "Dinesh Singh". Association of Democratic Rights. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2007 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2012 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_சிங்&oldid=3407367" இலிருந்து மீள்விக்கப்பட்டது