திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில் நிலையம் சாலை, திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°45′53″N 79°38′02″E / 10.7648°N 79.6338°E / 10.7648; 79.6338
ஏற்றம்287 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை5
இணைப்புக்கள்பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுDG
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
அமைவிடம்
திண்டுக்கல் சந்திப்பு is located in தமிழ் நாடு
திண்டுக்கல் சந்திப்பு
திண்டுக்கல் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
திண்டுக்கல் சந்திப்பு is located in இந்தியா
திண்டுக்கல் சந்திப்பு
திண்டுக்கல் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

திண்டுக்கல் சந்திப்பு தொடருந்து நிலையம் (Dindigul Junction railway station, நிலையக் குறியீடு:DG) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, திண்டுக்கல் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1]

இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சென்னை மற்றும் வடக்கிலிருந்து மதுரை சந்திப்பை நோக்கி செல்லும் அனைத்து தொடருந்துகளும் இந்நிலையம் வழியாகச் செல்வதால், இது மதுரை சந்திப்புக்கான நுழைவாயிலாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

திண்டுக்கல் சந்திப்பானது, சிட்கோ தொழிற்பேட்டை தோட்டத்தை ஒட்டியுள்ள நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • வெள்ளோடு தொடருந்து நிலையம் (தெற்கு)
  • தாமரைபாடி தொடருந்து நிலையம் (கிழக்கு)
  • அக்கரைப்பட்டி தொடருந்து நிலையம் (மேற்கு)
  • எரியோடு தொடருந்து நிலையம் (வடக்கு)

இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 62 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையமாகும்.

வழித்தடங்கள்[தொகு]

இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:

  • மதுரை நோக்கி செல்லும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப்பாதை.
  • திருச்சி நோக்கி செல்லும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப்பாதை.
  • கரூர் நோக்கி செல்லும் மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப்பாதை.
  • பாலக்காடு நோக்கி செல்லும் ஒற்றை அகலப்பாதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "திண்டுக்கல் ரயில் நிலையம் நவீனமாகிறது: ரூ.7 கோடியில் திட்டப் பணிகள்". தினமலர் (13 சூலை, 2015)

வெளி இணைப்புகள்[தொகு]