தலித் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலித் பெண்ணியம் (Dalit feminism) என்பது தலித் மக்களிடையே சாதி மற்றும் பாலின பாத்திரங்களை கேள்வி கேட்பதை உள்ளடக்கிய ஒரு பெண்ணிய செயற்பாடு ஆகும். தலித் பெண்கள் தெற்காசியாவில், குறிப்பாக வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வாழ்கின்றனர். இந்த நாடுகளில் உயர் சாதியிலுள்ள பெண்களை விட தலித் பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ஏழைகளாகவும், படிக்காதவர்களாகவும், சமூக ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. தலித் பெண்ணியவாதிகள் பாலினம், சாதி மற்றும் பிற பிரச்சனைகளின் அடிப்படையில் தலித் பெண்களின் சம உரிமைக்காகப் போராடுகின்றனர். இது தொடர்பாக பெண்ணியவாதிகள் பல மாநாடுகளில் உரையாற்றினர், அவர்களுக்காக அமைப்புகளை உருவாக்கி, மற்ற தலித் பெண்களை அரசியலில் ஈடுபடச் செய்துவருகின்றனர்.

பின்னணி[தொகு]

நேபால், பாக்கிஸ்தான், வங்காளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் தலித் பெண்கள் உள்ளனர். இந்தியாவில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் என்று அதிகாரப்பூர்வமான குழுவாக அறியப்பட்டாலும் , தலித் பெண்கள் ஒதுக்கப்பட்ட மக்களாகவே கருதப்படுகிறார்கள்.[1] [2] நேபாளத்தில், தலித் பெண்கள் மக்கள் தொகையில் 13.2% பேர் உள்ள்னர். [3] பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான தலித் பெண்கள் பஞ்சாப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர், 1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி.[4] ஒட்டுமொத்தமாக, தலித் பெண்கள் உலக மக்கள்தொகையில் 2% மக்கள்தொகையில் உள்ள "சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட" மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.[5] மேலும் பலர் படிப்பறிவற்றவர்கள். [2] தலித் பெண்கள் உயர் சாதியிலுள்ள ஆண்களிடமிருந்து மட்டுமல்ல, மற்ற தலித் ஆண்களிடமிருந்தும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.[6] தலித் குழுக்களிடையே ஒரு படிநிலை உள்ளது, சில தலித்துகள் மற்றவர்களை விட சமூக அளவில் உயர்ந்தவர்களாக உள்ளனர்.[7]

தலித் பெண்கள் அதிக அளவிலான வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.[5] தேவதாசி அல்லது ஜோகினி அமைப்பு போன்ற சில வகையான கட்டாய விபச்சாரம் குறிப்பாக தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும்பாலும் தங்கள் உரிமைகளை அறிந்திருக்கவில்லை அல்லது அவர்களுக்கான உரிமைகள் என்பதனை முறையாக அவர்களுக்கு தெரிவிக்கப்படாத சூழ்நிலை இங்கு நிலவுகின்றது.[8] ஒரு தலித் பெண்கள் வன்முறைத் தாக்குதல் குறித்துப் புகாரளிக்கும்போது காவல்துறை குற்றமிழைத்தவர் குறித்து போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.[9] ஆங்கில ஆய்வுகள் சர்வதேச ஆராய்ச்சி இதழில் எழுதிய கிரண் குமார் பொட்டு மற்றும் சிவா நாகையா பொல்லெட்டு ஆகியோரின் கூற்றுப்படி, தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை "அடக்குமுறையின் வழக்கமான நிகழ்வாகக என்று கருதப்படுகிறது" என்று கூறியுள்ளனர். [10] தலித் பெண்களின் கீழ் ஜாதி அந்தஸ்து காரணமாக உயர் சாதியினரால் தலித் பாலியல் நீண்ட காலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். [11] நேபாளத்தில், 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 50.6% தலித் பெண்கள் உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட தினசரி வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, பல நேபாள தலித் பெண்கள் சௌபதி நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். [3] பாகிஸ்தானில், தலித் பெண்கள் கடத்தல்கள் மற்றும் கட்டாய இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்கொள்கின்றனர். [12]

வரலாற்று ரீதியாக, தலித் உரிமை இயக்கங்கள் தலித் ஆண்கள் மீது அதிக கவனம் செலுத்தியது ஆனால் இந்திய பெண்ணியத்தால் தலித் பெண்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.[6] பரவலாக அறியப்படும் பல இந்திய பெண்கள் இயக்கங்கள், பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வகுப்பு பெண்களால் நடத்தப்படுகிறது, தலித் பெண்கள் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அந்த இயக்கங்கள் புறக்கணித்ததால் விமர்சிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்ணியக் கல்வியாளர்களும் தலித் பெண்கள் எதிர்கொண்ட சாதிப் பிரச்சினைகளைப் புறக்கணித்துள்ளனர். [13]

சான்றுகள்[தொகு]

  1. Mehta 2017.
  2. 2.0 2.1 Haijer 2007.
  3. 3.0 3.1 FEDO 2017.
  4. "Dalit women in Pakistan". International Dalit Solidarity Network (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
  5. 5.0 5.1 Manorama, Ruth. "Background Information on Dalit Women in India" (PDF). Right Livelihood Award. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 Rattanpal, Divyani (8 July 2015). "Indian Feminism Excludes Dalit Women, But the Tide is Turning" (in en). The Quint. https://www.thequint.com/news/india/dalit-women-are-talking-about-their-identity. 
  7. "INDIA: Magida dalit woman hero moves beyond caste and 'untouchability'" (in en-US). Woman News Network (WNN). 2012-05-15 இம் மூலத்தில் இருந்து 2019-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190701173225/https://womennewsnetwork.net/2012/05/15/india-magida-dalit-woman-hero/. 
  8. "Dalit women's collective presents report on caste-based violence against women at UNHRC". The New Indian Express. 22 June 2018. http://www.newindianexpress.com/nation/2018/jun/22/dalit-womens-collective-presents-report-on-caste-based-violence-against-women-at-unhrc-1831935.html. 
  9. Dixit, Neha (15 February 2017). "Bundelkhand's Dalit Women Rally Against Government Negligence". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2018-08-18.
  10. Boddu & Bolleddu 2016.
  11. Gupta 2011.
  12. PDSN 2013.
  13. Kejiya & Tokala 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்_பெண்ணியம்&oldid=3930719" இலிருந்து மீள்விக்கப்பட்டது