தமிழ் வலைப்பதிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் மொழியில் எழுதப்பட்ட வலைப்பதிவு தமிழ் வலைப்பதிவு ஆகும். தமிழ்வலைப்பதிவுகளை திரட்டிகளின் மூலமாகவும், மின்னஞ்சல், ரீடர் போன்றவற்றில் சந்தாதாரராகியும் தமிழ் வாசகர்கள் தொடர்ந்து படித்து வருகிறார்கள்.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன. எளிதாக வலையில் தமது படைப்புக்களை பகிர்வதையும், பின்னூட்டங்கள் மூலம் வலைப்பதிவர்களிடம் தொடர்பாடலையும் ஏதுவாக்கி வலைப்பதிவுகள் மிக வேகமான வளச்சியைக் கண்டன. ஒருங்குறி மூலம் தமிழ் மொழியில் எழுதுவதும், படிப்பதும் இலகுவாகியது. புதுவை எழுதி, ஏ கலைப்பை மூலம் தமிழ்த் தட்டச்சு எளிதானது. தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின. அப்போது வலையில் பரவலாக வாசிக்கப்பட்ட திசைகள் இதழிலும் வலைப்பதிவுகள் பற்றி பரந்த அறிமுகங்கள் நிகழ்ந்தன. இந்திய மொழிகளில் தமிழிலேயே முதன் முதலில் பரவலாக வலைப்பதிவுகள் எழுப்பட்டன.

தமிழ் வலைப்பதிவுகள் பரவலாக எழுதப்படுவதை தொகுக்கும் முதல் முயற்சியாக தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் 2003 உருவாக்கப்பட்டது. வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டியாக தமிழ்மணம் வெளிவந்தது.

எண்ணிக்கை [தொகு]

தற்போதைக்கு சுமார் 11000 தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன.[1] மற்றும் 6000 மேற்பட்ட தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளார்கள். பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள் ப்ளாக்கர் இணைய தளங்களில் செயல்படுகின்றன.

உள்ளடக்கம் [தொகு]

தமிழ் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பரந்துபட்டுள்ளது. குறிப்பாக தமிழ், ஆங்கில திரைப்படங்கள் பற்றியும் பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றிய வலைப்பதிவுகளும் இறைந்துள்ளன. இதே வேளை துறைசார் வலைப்பதிவுகளும் தற்போது வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. கணனி, திரைப்படம், நுட்பம் போன்ற துறைகளில் துறைசார் வலைப்பதிவுகள் பெருமளவில் உருவாகிவருகின்றன.

பதிவு எடுத்துக்காட்டுக்கள் [தொகு]

அம்மாக்களின் பகிர்வுகள் [1]
மூலிகைகளின் வளம் [2]
விஞ்ஞானக் குருவி [3]
இசை இன்பம் [4]
தலித் முஸ்லிம் [5]
நுகர்வோர் நலன் [6]
தமிழ் வேலைவாய்ப்புக்கள். [7]
தமிழ் வழி ஆங்கிலம் [8]

திரட்டிகள் [தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ் வலைப்பதிவுத் திரட்டி

மேற்கோள்கள் [தொகு]

  1. பதினோராயிரம் தமிழ்த் தளங்கள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வலைப்பதிவு&oldid=1086351" இருந்து மீள்விக்கப்பட்டது