தடகள விளையாட்டரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடகள விளையாட்டரங்கு (Athlectic Stadium) : 100 மீட்டர் முதல் 10,000 மீட்டர் முதலான ஓட்டப் பந்தயங்கள், ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவ தடத்தில் (Track) நடைபெறும். இந்த தடத்தின் நடுவில் களப்போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவை நடைபெறும். தடத்தை சுற்றிலும் சாலையில் ஓடும் மாரத்தான் மற்றும் நடை போட்டிகள் விளையாட்டரங்கில் துவங்கி, சாலையில் தொடர்ந்து மீண்டும் விளையாட்டரங்கிலேயே முடிகிறது.

தடம்[தொகு]

தற்போது பன்னாட்டு போட்டிகள் எந்த பருவநிலையிலும் உபயோகப்படுத்தக்கூடிய செயற்கைத்தரை (synthetic) ஓடுகளங்களில் நடைபெறுகின்றன. ஓடுகளம் எட்டு வரிசைகள் கொண்ட ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் தூரம் உடைய நீள்வட்டப் பாதை. 100 மீட்டர், 110 மீட்டர் பந்தயங்கள் நேர்கோட்டிலேயே நடைபெற ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். எல்லா பந்தயங்களுக்கும் முடிவுறும் வெற்றிக் கோடு (Finishing line) ஓரே இடத்தில் வருமாறு போட்டிகள் நடத்தப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடகள_விளையாட்டரங்கு&oldid=3502729" இலிருந்து மீள்விக்கப்பட்டது