டார்வின் நாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டார்வின் நாள் | |
டார்வின் 59வது அகவையில் |
|
| அனுசரிப்பவர்கள் | பல்வேறு குழுக்களும் தனிப்பட்டோரும் |
|---|---|
| முக்கியத்துவம் | டார்வினின் வாழ்வையும் அவரது பணிகளையும் நினைவு கூருதல் |
| நாள் | பெப்ரவரி 12 |
| கொண்டாட்டங்கள் | பல்வேறு |
| தொடர்புடையன | கூர்ப்பு நாள் |
டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூருகிறார்கள்.