டாடாபாத்

ஆள்கூறுகள்: 11°01′34″N 76°57′33″E / 11.026000°N 76.959100°E / 11.026000; 76.959100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாடாபாத்
Tatabad
புறநகர்ப் பகுதி
டாடாபாத் Tatabad is located in தமிழ் நாடு
டாடாபாத் Tatabad
டாடாபாத்
Tatabad
டாடாபாத் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′34″N 76°57′33″E / 11.026000°N 76.959100°E / 11.026000; 76.959100
நாடு India
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்448 m (1,470 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641012
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், கணபதி
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி

டாடாபாத் ("Tatabad") என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மிகுதியாக உள்ள பகுதி டாடாபாத்.

கோவையில் புகழ்பெற்ற மருத்துவ நரம்பியல் நிபுணராக விளங்கிய காலஞ்சென்ற மருத்துவர் எம். பி. பிரானேஷ் (Dr. M. B. Pranesh), டாடாபாத்தில் வசித்தவர் என்பதும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளிடமிருந்து ஆலோசனைக் கட்டணங்களை அவர் பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.[2]

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்கப்பட்டதில் கோவை மாவட்டத்திலுள்ள டாடாபாத் பகுதியும் அடங்கும். இப்பகுதியில் வீடு பெற்றோர், நிலுவைத்தொகை செலுத்தி, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள 2023 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தியதி வரை வீட்டுவசதி வாரியம் கால அவகாசம் அளித்து, அழைப்பு விடுத்துள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 448 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டாடாபாத் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'33.6"N 76°57'32.8"E (அதாவது, 11.026000°N 76.959100°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

கோயம்புத்தூர், காந்திபுரம், ஆர். எஸ். புரம், பாப்பநாயக்கன் பாளையம், கணபதி, சித்தாபுதூர், சாய்பாபா காலனி, சங்கனூர் ஆகியவை டாடாபாத்திற்கு அருகிலுள்ள ஊர்களாகும்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

டாடாபாத் பகுதி வழியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை செல்கின்றன. காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி பேருந்து நிலையம் ஆகியவை டாடாபாத்திற்கு அருகிலேயே உள்ளன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் டாடாபாத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்து சேவை புரிகிறது.

மருத்துவம்[தொகு]

24 மணி நேர மருத்துவ சேவைகள் கொண்ட கங்கா மருத்துவமனை சுமார் 2 கி.மீ. தூரத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. நியூபெர்க் (Neuberg) நிறுவனமானது, தனது மருத்துவப் பரிசோதனை ஆய்வகம் ஒன்றை, 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், டாடாபாத்தில் நிறுவியுள்ளது.[4]

தொழில்[தொகு]

கோவை மாவட்டத்திலுள்ள சுமார் 25,000 தொழிற்கூடங்களைச் சார்ந்த 20 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் குறுந்தொழில் முனைவோரும் சேர்ந்து, தமிழ்நாட்டில் மின்உயர்வு கட்டணத்தின் ஓர் அங்கமான 'பீக் அவர்ஸ்' கட்டணத்தை எதிர்த்து, டாடாபாத்தில், 26.11.2022 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.[5] கோவை மாவட்டத்தில் சுமார் 25,000 நிறுவனங்கள் கடையடைப்பு செய்து, டாடாபாத்திலுள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் அருகில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in ta) பெண்கள் வாழ்வியலும் படைப்பும்: பெண் எழுத்தாளர் கட்டுரைகள். தமிழ் நேயம். 2003. https://books.google.co.in/books?id=EWRkAAAAMAAJ&q=%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%258D&dq=%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiQkrPc4NL7AhWTRmwGHYx9Bh0Q6AF6BAgJEAM#%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%258D. 
  2. "Coimbatore's renowned neurologist who treated poor patients for free dies due to COVID-19 - The New Indian Express". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/aug/01/coimbatores-renowned-neurologist-who-treated-poor-patients-for-free-dies-due-to-covid-19-2177842.amp. 
  3. "நிலுவை செலுத்தி பத்திரம் பெற வீட்டு வசதி வாரியம் அழைப்பு - Dinamalar Tamil News" (in ta). 2022-11-25. https://m.dinamalar.com/detail.php?id=3178844. 
  4. Staff Reporter (2022-05-15). "Neuberg Diagnostics opens laboratory in Coimbatore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/neuberg-diagnostics-opens-laboratory-in-coimbatore/article65416839.ece. 
  5. தினத்தந்தி (2022-11-26). "குறுந்தொழில் முனைவோர் உண்ணாவிரதம்" (in ta). https://www.dailythanthi.com/News/State/small-entrepreneurs-fast-844606. 
  6. "மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கோவையில் 25 ஆயிரம் நிறுவனங்கள் கதவடைப்பு" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/903802-25-thousand-companies-shut-down-in-coimbatore.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடாபாத்&oldid=3631695" இலிருந்து மீள்விக்கப்பட்டது