ஞாநி (எழுத்தாளர்)
| ஞாநி | |
|---|---|
பரீக்ஷா ஞாநி |
|
| பிறப்பு | வே. சங்கரன் சனவரி 4, 1954 செங்கல்பட்டு, தமிழ்நாடு |
| இருப்பிடம் | சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | மனிதன் |
| கல்வி | பி.ஏ. |
| பணி | பத்திரிக்கையாளர் |
| பணியகம் | இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்தவிகடன், முரசொலி |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| பெற்றோர் | வேம்புசாமி, பங்காரு |
| வாழ்க்கைத் துணை | பத்மா |
| பிள்ளைகள் | மகன்: மனுஷ் நந்தன் |
ஞாநி (பி. 4 சனவரி 1954) செங்கல்பட்டில் பிறந்தவர்; ஒரு தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமரிசகர், கட்டுரையாளர். இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.
சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வருகிறார். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இவர் கோவையைச் சேர்ந்த மார்க்ஸிய ஆய்வாளர் ஞானியுடன் பலசமயம் குழப்பிக்கொள்ளப் படுகிறார்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
இண்டியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
ஆக்கங்கள் [தொகு]
கட்டுரைகள் [தொகு]
- பழைய பேப்பர்
- மறுபடியும்
- கண்டதைச் சொல்லுகிறேன்
- கேள்விகள்
- மனிதன் பதில்கள்
- நெருப்பு மலர்கள்
- பேய் அரசு செய்தால்
- அயோக்யர்களும்முட்டாள்களும்
- கேள்விக் குறியாகும் அரசியல்
- அறிந்தும் அறியாமலும்
- ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
- என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
நாடகங்கள் [தொகு]
- பலூன்
- வட்டம்
- எண் மகன்
- விசாரணை
- சண்டைக்காரிகள்
புதினங்கள் [தொகு]
- தவிப்பு
திரைக்கதை [தொகு]
- அய்யா(பெரியார் வாழ்க்கை)
குறும்படங்கள் [தொகு]
- அய்யா
- ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?