தீம்தரிகிட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீம்தரிகிட என்பது ஞாநியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஒரு சிற்றிதழாகும்.[1]

வரலாறு[தொகு]

நெருக்கடி நிலை ஆட்சிக்காலத்தில், கருத்துச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இயங்கிய ஆங்கிலப் பத்திரிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் அப்படியான செய்தி விமர்சனப் பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவோடு, பாரதியின் மழை கவிதையில் இடம்பெற்றிருந்த தீம்தரிகிட என்ற தாளக்குறிப்பை பத்திரிக்கையின் பெயராகக் கொண்டு துவக்கிய இதழாகும். 1982 இல் மூன்று இதழ்களோடு நின்றுபோனது. சிறு இடைவெளிக்குப் பிறகு, 1985 இல் ஐந்து இதழ்கள், 17 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2002 இல் தொடங்கி 2006 வரை இந்தப் பத்திரிக்கை நடத்தப்பட்டது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்தில் தடைபட்டு தடைபட்டு வெளியான இந்த இதழானது வார இதழ், மாதம் இருமுறை இதழ், மாத இதழ் என்று கால மாற்றங்களையும், ஏ4, ஏ3, 1/8 டெமி என்று வடிவ மாற்றங்களைக் கண்டு வெளிவந்தது.[2]

தொகுப்பு[தொகு]

1982 முதல் 2006 வரை வெளிவந்த தீம்தரிகிட இதழ்களின் தொகுப்பானது ஏறக்குறைய 2000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக ஞானபாநு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

கீற்று இணையதளத்தில் தீம்தரிகிட இதழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஞாநி சங்கரன் எழுதிய கடைசி ஃபேஸ்புக் பதிவு". செய்திக் கட்டுரை. bbc.com/tamil. 15 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  2. செல்வ புவியரசன் (12 மே 2018). "தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீம்தரிகிட&oldid=3577527" இலிருந்து மீள்விக்கப்பட்டது