ஜோகன் சிவனேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோகன் சிவனேஷ் (Johan Shevanesh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் 2016 ஆண்டு வெளியான மெட்ரோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது கீபோர்டு இசைக்கப் பழகினார். பத்தாம் வகுப்பு முடித்தப்பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்தத இசைப்பளிளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது.

இயக்குநர் சுசி கணேசனிடம் கந்தசாமி படத்தில் துணை இயக்குநராக வேலைபார்த்த ஆனந்த கிருஷ்ணன் ஜோகனுக்கு அறிமுகமானார். இவர் 2013இல் இந்திப் படமான ‘ஆமிர்’ படத்தை மறுதயாரிப்பில் ஆள் படமாக எடுக்க முடிவெடுத்தார். இந்தப்படத்திற்கு ஜோகன் இசையமைத்தார். இந்தப் படத்தின் திரைக்கதைக்கு இசைதான் உயிர்நாடி. அதிலும் கடைசி 20 நிமிடங்களுக்கு வசனமே கிடையாது. ஏற்கெனவே கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தாலும் ஆள் படம் ஜோகனுக்கு அடையாளம் தேடித் தந்தது. அதன்பிறகு மெட்ரோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ம.சுசித்ரா (1 சூலை 2016). "புறப்படும் புதிய இசை - 13 : என்றென்றும் இசை மாணவர்". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகன்_சிவனேஷ்&oldid=3578359" இலிருந்து மீள்விக்கப்பட்டது