ஜேரட் டயமண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேரட் டயமண்ட் | |
|---|---|
| பிறப்பு | 10 செப்டம்பர் 1937 |
| பிறப்பிடம் | பாஸ்டன், மாசசூசெட்ஸ் |
| வாழிடம் | அமெரிக்கா |
| குடியுரிமை | அமெரிக்கர் |
| துறை | உடற்செயலியல் உயிர் இயற்பியல் பறவையியல் சூழலியல் புவியியல் பரிணாம உயிரியல் மானுடவியல் |
| கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
| விருதுகள் | அறிவியலுக்கான பை பீட்டா காப்பா விருது (1997) வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு (1992, 1998 & 2006) புலிட்சர் பரிசு (1998) தேசிய அறிவியல் பதக்கம் (1999) |
ஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசிஎலஏ)புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார். தி தர்ட் சிம்பான்சி, கன்ஸ், ஜெர்ம்ஸ் அண்ட் ஸ்டீல், கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. புலிட்சர் பரிசு, அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஜேரட் டயமண்ட் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |