ஜெயின்மேடு ஜெயினக் கோயில்

ஆள்கூறுகள்: 10°47′8.4″N 76°38′33.2″E / 10.785667°N 76.642556°E / 10.785667; 76.642556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{building_name}}}
ஜெயின்மேடு ஜெயினக் கோயில்
ஜெயின்மேடு ஜெயினக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரளம், பாலக்காடு மாவட்டம், ஜெயின்மேடு
புவியியல் ஆள்கூறுகள்10°47′8.4″N 76°38′33.2″E / 10.785667°N 76.642556°E / 10.785667; 76.642556
சமயம்சைனம்

ஜெயின்மெடு ஜெயின் கோயில் (Jainimedu Jain temple) என்பது 15 ஆம் நூற்றாண்டய சமண கோயில் ஆகும்   இது தென்னிந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காடு மையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது [1] இது சமண சமய தீர்த்தங்கரான சந்திரபிரபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [2] [3]

பிரபல மலையாள கவிஞரான குமரன் ஆசான், தனது நினைவுச்சின்ன கவிதையான வீணபூவு (விழுந்த மலர்) இங்குள்ள ஒரு சமணர் வீட்டில் எழுதினார். [4] 'ஜெயினமெடு' என்ற இந்த இடத்தின் பெயர் இந்த கோயிலுடன் தொடர்புடையது.

வரலாறு[தொகு]

இந்த ஜெயின கோயிலானது 15 ஆம் நூற்றாண்டில் கர்நாடத்தைச் சேர்ந்த வைர வியாபாரி குடும்பத்தால் கட்டப்பட்டது. [5] இதை இஞ்சனா சாத்துர் என்பவர் உருவாக்கியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இந்த கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. [1] அந்த நேரத்தில், ஜெயினமேட்டில் சுமார் 400 சமண குடும்பங்கள் இருந்தன. [3] இந்த கோயில் 2013 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச கல்யாணக் செய்யப்பட்டது. [2] இந்நிகழ்ச்சியில் பிரபல கேரள சமணரான எம். பி. வீரேந்திர குமார் பேசினார். [6] சடங்குகளுக்கு கனககிரி ஜெயின் மடத்தின் தலைவர் புவனகீர்த்தி பட்டாக்கர சுவாமிகள் தலைமை தாங்கினார். [7]

கேரளத்தில் சமண சமயத்தின் இடங்களில் தப்பிப்பிழைத்த சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். [4]

விளக்கம்[தொகு]

32 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட இந்த கோயில் சமண தீர்த்தரங்கரர்கள் மற்றும் யக்ஷினிகளின் உருவங்களைக் கொண்டுள்ளது. [6]

படக்காட்சியகம்[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 PTI May 12, 2013, 06.42PM IST (2013-05-12). "15th-century Jain temple in Kerala to be reopened - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. 2.0 2.1 "Temple ritual". The Hindu. 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  3. 3.0 3.1 Mundur M.K. Krishnan (2011-11-14). "The home of Jainism in Kerala". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  4. 4.0 4.1 Kerala Tradition & Fascinating Destinations - Biju Mathew - Google Books. Books.google.com. https://books.google.com/books?id=fjWPiQyOwGkC&pg=PA282&dq=jainimedu&hl=en&sa=X&ei=yL7qUYzBC6--4APwoYD4Aw&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=jainimedu&f=false. பார்த்த நாள்: 2013-07-20. 
  5. "Renovated Jain temple in Kerala opened for devotees". Zeenews.india.com. 2013-05-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  6. 6.0 6.1 "Keeping alive Jain faith". The Hindu. 2013-05-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.

வெளி இணைப்புகள்[தொகு]