ஜிசாட்-31

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிசாட்-31
ஜிசாட்-31 விண்வெளிப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட அமைப்பு
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்ISRO
திட்டக் காலம்திட்டமிடப்பட்ட ஆயுள் காலம்: 15 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-2கே
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக்கோள் மையம்
விண்வெளி பயன்பாட்டு மையம்
ஏவல் திணிவு2536 கிகி
திறன்சூரிய அலைக்கற்றைகள், மின்கலங்கள்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்6 பெப்ரவரி 2019
ஏவுகலன்ஏரியன் 5
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய சுற்றுப்பாதை
Slot48°E
Transponders
Bandகு பாண்ட் அலைவரிசை
----
ஜிசாட்
← ஜிசாட்-7ஏ

ஜிசாட்-31 (GSAT-31) என்பது இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் 40-ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் நாள் அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ஏவுகலமான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.[1] இந்த செயற்கைக்கோளின் எடை 2,536 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.[2]

பயன்பாடு[தொகு]

இந்த செயற்கைக்கோளின் மூலம் இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியும், தீவுப்பகுதிகளும் பலன் பெறும். விசாட் பிணையம், தொலைக்காட்சி இணைப்பு, எண்ணிம செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, நேரடியான வீடுகளுக்கான தொலைக்காட்சி சேவை, செல்லிடத் தொலைபேசி சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது". மாலை மலர். 6 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "GSAT-31". ISRO. 6 February 2019. Archived from the original on 10 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அதிகாலை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-31 செயற்கைக்கோள்". புதிய தலைமுறை. 05 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசாட்-31&oldid=3930430" இலிருந்து மீள்விக்கப்பட்டது