சௌந்தர நாயகி தசகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌந்தர நாயகி தசகம் ஒரு சிற்றிலக்கியம். [1] சதகம் என்பது 100 பாடல்கள் கொண்ட இலக்கியம். தசகம் என்பது 10 பாடல்கள் கொண்ட நூல். சௌந்தர நாயகி தசகம் என்னும் நூலைப் பாடியவர் உறையூர் தே. பெரியசாமி பிள்ளை. இந்த நூலுக்கு நா. கதிரைவேற்பிள்ளை பாடிய சிறப்புப் பாயிரம் ஒன்று உண்டு. இவர் கருவூப் பசுபதீசுரர் பாமாலை, திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம் என்னும் வேறு இரண்டு நூல்களையும் பாடியுள்ளார். கருவூர் ஆனிலையப்பர் கோயிலில் உள்ள சவுந்தர நாயகியைப் போற்றும் பாடல்களாக இவை உள்ளன.

எடுத்துக்காடு - பாடல்[தொகு]

பூரணி புராதனி புராந்தகி புராணி பொருந்து சுத்த தயிருனி பாவனை தவம் நீ
ஆரணி காலோள் நனி சாமுண்டி துக்காவேணி அசனி இராத்திரி சாகை இல் பாசிகமலை
சீரணியா நந்தி சிவசுந்தரி என்று உனையே தினமும் நனி ப்கழ்ந்து ஏத்தும் திறம் அளி செய்தே
தாரணியின் எனை ஆளும் கடமை நினது அன்றோ தலத்துள் உயர் கருவூர் வாழ் சௌந்தர நாயகியே -- பாடல் 8

மேற்கோள்[தொகு]

  1. தே. பெரியசாமி பிள்ளை,திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம், பதிப்பு: லாலாபேட்டை க. பொ. சி. முத்துக்கருப்ப பிள்ளை பதிப்பு - அச்சகம் : ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், பதிப்பாண்டு 1906.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தர_நாயகி_தசகம்&oldid=3850084" இலிருந்து மீள்விக்கப்பட்டது