ஆனிலையப்பர் போற்றிப் பதிகம்
Appearance
ஆனிலையப்பர் போற்றிப் பதிகம் (திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம்) [1] என்பது ஒரு சிற்றிலக்கியம். இதனை இயற்றியவர் உறையூர் தே. பெரியசாமி பிள்ளை. இவர் கருவூப் பசுபதீசுரர் பாமால, சௌந்தரநாயகி தசகம் என்னும் வேறு இரண்டு நூல்களையும் படைத்துள்ளார். நா. கதிரைவேற்பிள்ளை இயற்றிய சிறப்புப் பாயிரம் இதற்கு உண்டு. பதிகம் என்னும் சிற்றிலக்கியம் 10 பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளளன.
பாடல் - எடுத்துக்காட்டு
[தொகு]பாடல் 1
தேவர்கள் தேவே போற்றி சிவபரஞ் சுடரே போற்றி
மூவரும் ஏத்த நின்ற முக்கண் எம் பெருமான் போற்றி
மேவரும் பொருளே போற்றி விலங்கல் வில் உடையாய் போற்றி
ஆவின் நஞ்சு உகந்தாய் போற்றி ஆனிலைப் பரமா போற்றி
பாடல் 7
ஈசனே போற்றி எங்கள் இறைவனே போற்றி அம்மை
நேசனே போற்றி மன்றில் நிருத்தனே போற்றி பாவ
நாசனே போற்றி யார்க்கும் நாதனே போற்றி வேத
வாசனே போற்றி தெய்வ ஆனிலை பரமா போற்று
மேற்கோள்
[தொகு]- ↑ தே. பெரியசாமி பிள்ளை,திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம், பதிப்பு: லாலாபேட்டை க. பொ. சி. முத்துக்கருப்ப பிள்ளை பதிப்பு - அச்சகம் : ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், பதிப்பாண்டு 1906.