சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
குறிக்கோளுரைThe Gateway to Knowledge and Success
வகைதனியார்
உருவாக்கம்1995
Academic affiliation
அண்ணா பல்கலைக்கழகம், தன்னாட்சி
கல்வி பணியாளர்
~515
மாணவர்கள்~4500
அமைவிடம்
புள்ளூர், கரியாபட்டி, விருதுநகர்
, ,
வளாகம்நாட்டுப்புறம்
இணையதளம்http://sethu.ac.in/

சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Sethu Institute of Technology)

  • தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, புல்லூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1995 ஆம் ஆண்டு சேது கல்வி அறக்கட்டளையால், கல்வியாளர் திரு. முகமது ஜலீல் தலைமையிலான கல்வியாளர்களின் குழுவால் துவங்கப்பட்டது. இது புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, புது தில்லி, தேசிய அங்கீகார வாரியம் போன்றவற்றில் அங்கீகாரம் பெற்றது. மேலும் இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு எட்டு பிரிவுகளில் இளநிலை பாடங்களும், ஏழு பிரிவுகளில் முதுநிலை பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இந்த கல்லூரிக்கு 2012 ஆம் ஆண்டில் ஏஐசிடிஇ- ஆல் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது; இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் 2014 இல் உறுதிப்படுத்தப்பட்டது.

விவரம்[தொகு]

கல்வியின் நோக்கம் ஒரு நபரை ஒரு தனித்துவமான ஆளுமையாக்குவதேயாகும், இதனால் அவர்களால் புதிய யோசனைகளின், தொலைநோக்குடன் சமூகத்திற்கு உதவ முடியும். இதை மனதில் கொண்டு, சேது கல்வி அறக்கட்டளையால், 1995 ஆம் ஆண்டில் புல்லூர், கரியபட்டி - 626 106, விருதுநகர் மாவட்டத்தில் "அறிவு, சேவை, வளர்ச்சி" என்ற குறிக்கோளுடன், சேது தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டது.

இதன் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. எஸ். முகமது ஜலீல். அவரது சிந்தனையான சேது தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, கல்வி, தொழில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புறங்களின் தொடர் வளர்ச்சியைப் பூர்த்தி செய்வதற்காக 1995 முதல் சேவையாற்றி வருகிறது. 1995 ஆம் ஆண்டில் 180 மாணவர்களுடன் மூன்று இளநிலைப் படிப்புகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 47 இளநிலைப் படிப்புகள் மற்றும் 5 முதுநிலைப் பட்டப்படிப்புகளுடன் 4,700 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது.

அமைவிடம், உள்கட்டமைப்பு[தொகு]

இக்கல்லூரி தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, புல்லூரில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.எண்:45பி) அமைந்துள்ளது. இது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்லூரி வளாகமானது 132 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கல்லூரி நூலகமானது 56,123 தொகுதிகளைக் கொண்டுள்ளதாகவும், 140 சர்வதேச பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்துவதாகவும் உள்ளது. குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில், பல்லூடகம், ஸ்கேனர்களுடன் வலையமைப்பில் இணைக்கப்பட்ட நவீன கணினி அமைப்புகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. ஆய்வகங்கள், பொறியியல் வரைதல் மண்டபம், ஊழியர், மாணவர்கள் அறைகள், உணவகம் ஆகிய வசதிகள் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
  • பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.டெக். வேதிப் பொறியியல்
  • பி.இ. வேளாண் பொறியியல்
  • பி.இ. உயிர் மருத்துவப் பொறியியல்.

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

  • எம்.இ. சிஏடி (CAD) / சிஏம் (CAM)
  • எம்.இ. தொடர்பு அமைப்பு
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. ஆற்றல் மின்னணு மற்றும் செயலிகள்
  • எம்.இ. கட்டமைப்புப் பொறியியல்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு[தொகு]

பின்வரும் துறைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் இக்கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை
  • இயந்திரப் பொறியியல் துறை
  • மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் துறை
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
  • குடிசார் பொறியியல் துறை
  • வேதியியல் துறை
  • இயற்பியல் துறை.

விடுதி வசதிகள்[தொகு]

  • சேது தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மாணவர், மாணவிகளுக்கு, தனித்தனி விடுதிகளைக் கொண்டுள்ளது. பெண்களுக்கான விடுதியானது மிகவும் விசாலமாக, 52 அறைகளுடன் 282 மாணவர்களைக் கொண்டுள்ளது. வளாகத்தின் குறைகளை களைந்து மேற்பார்வையிட வார்டன் உள்ளார். விடுதி, ஒரு பிரார்த்தனை மண்டபம், ஒரு கணினி மையம், ஒரு கடை போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதே தரத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி உள்ளது. இதில் 364 மாணவர்களுக்கு வசதியான தங்குமிடங்களுடன் கூடிய அறைகள் உள்ளன. மாணவர்களைக் கண்காணிக்க இரண்டு வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மாணவர் அறைகள், உள்ளமைக்கப்பட்ட அலமாரிகள், கட்டில்கள், மேசைகள், நாற்காலிகளைக் கொண்டுள்ளன. மேலும் வெந்நீர் வசதிகள் கொண்டுள்ளன. மேலும் விடுதி வளாகத்தில் 24 × 7 இருக்கும் வைஃபை வசதி, மாணவர்கள் தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய படிக்கும் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது. கற்றலில் சிக்கல் உள்ளவர்களுக்கு வழக்கமான வகுப்பு நேரங்களுக்குப் பிறகு, விடுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விடுதி உணவகத்தில் மாணவர்களின் வசதிக்காக சைவ மற்றும் அசைவ உணவகங்கள் தனித்தனியாக உள்ளன. விடுதியில் தொலைக்காட்சி மண்டபம், உடற்பயிற்சி உபகரணங்களுடன்கூடிய அறை போன்றவையும் உள்ளன.
  • மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளுக்கு, தடையற்ற மின்சாரமானது, சூரிய சக்தி ஆற்றல் மூலம் வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு வசதிகள்[தொகு]

கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்பு பிரிவானது மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிப்பதுடன், தொழிலதிபர்களை அழைத்துவந்து சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்வதுடன் வளாக நேர்காணலை ஒருங்கிணைக்கிறது. இறுதி ஆண்டு மாணவர்களின் நலனுக்காக ஆளுமை மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]