செல்வம் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வம் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2000
கல்வி பணியாளர்
134
மாணவர்கள்2679
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

செல்வம் கலை அறிவியல் கல்லூரி[1] முனைவர் பி.செல்வராஜால் 2000 ஆம் ஆண்டில் வி.பொன்னுசாமி கல்வி மற்றும் அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்டது, இது அவரது மறைந்த தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்டது. சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைந்துள்ளது இக்கல்லூரி.

அறிமுகம்[தொகு]

திருச்சி சாலையில் ஒரு தற்காலிக கட்டிடத்தில் 3 பாடநெறிகள், 7 ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் 77 மாணவர்களை ஆரம்பத்தில் உட்கொண்டது. தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம்[3] (NAAC)யிடம் இருந்து அங்கீகாரம் பெற்றது இக்கல்லூரி.

இடம்[தொகு]

13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரி, சேலம் சாலை, பாப்பநாயகம்பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியாகும்.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், வர்த்தகம், வர்த்தகம் (கணினி பயன்பாடு) ஆங்கிலம் மற்றும் வணிக நிர்வாகம் என கல்லூரி 18 இளங்களை படிப்புகள், 10 முதுகளை படிப்புகள், 7 ஆராய்ச்சி திட்டங்கள், 4 சான்றிதழ் பாடநெறிகள் மற்றும் 35 திறன் அடிப்படையிலான பாடநெறிகள் என 28 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]