செம்பரின் உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பரின் உறுப்பு (Semper's organ) என்பது மெல்லுடலிகளில் காணப்படும் உடற்கூறியல் அமைப்பு. இது நில நத்தைகள், நுரையீரல் வயிற்றுக்காலிகளின் தலைப் பகுதியில் அமைந்துள்ள சுரப்பு உறுப்பு ஆகும்.[1] இந்த உறுப்பிலிருந்து சுரக்கப்படும் சுரப்பு இயக்குநீர் போன்ற செயலைச் செய்கின்றது. இது முதுகெலும்பிலிகளின் உயிரணு உருவாக்கத்தில் பங்கு கொள்கிறது.[2]

இந்த உறுப்புக்கு செருமனிய விலங்கியல் நிபுணர் கார்ல் காட்ஃப்ரைட் செம்பரின் பெயரிடப்பட்டது. இவர் இந்த உடற்கூறியல் அமைப்பு பற்றிய தகவலை 1856-ல் முதலில் வெளியிட்டவர் ஆவார்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lane J. N. (1964) "Semper's Organ, a Cephalic Gland in Certain Gastropods". Quarterly Journal of Microscopical Science 105(3): 331-342.
  2. J. Lane, Nancy (https://doi.org/10.1242/jcs.s3-105.71.331).+"Semper’s organ, a cephalic gland in certain gastropods". J Cell Sci s3-105 (71): 331–342.. https://journals.biologists.com/jcs/article/s3-105/71/331/63907/Semper-s-organ-a-cephalic-gland-in-certain. 
  3. Carl Gottfried Semper. (1856) Z. wiss. Zool., 8, 366.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பரின்_உறுப்பு&oldid=3815813" இலிருந்து மீள்விக்கப்பட்டது