சென்னை விளாதிவசுத்தோக் கடல் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை விளாதிவசுத்தோக் கடல் பாதை (Chennai Vladivostok Maritime Corridor) இந்தியாவிற்கும் உருசியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 5,600 கடல் மைல்கள் அல்லது சுமார் 10,300 கி.மீ. தொலைவு கொண்ட பாதையாகும். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளாடிவோசுடாக்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பாதைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1][2]

பின்னணி[தொகு]

இந்தியாவின் கடல் வர்த்தகம் இதுவரை மும்பை-பீட்டர்சுபர்கு நகரங்களுக்கிடையிலான வழியில்தான் நடைபெற்றுவருகிறது. மும்பையிலிருந்து செயின்ட் பீட்டர்சுபர்க்கிற்குச் செல்லும் தற்போதைய பாதை சென்னை விளாடிவோசுடாக் கடல் பாதையைக்காட்டிலும் சுமார் 3000 கடல் மைல்கள் அதிகத் தொலைவு கொண்டதாகும். [1][3][4] மொத்தமாக 40 நாட்கள் பயண நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.[5] ஒரு பெரிய கப்பல் சாதாரண பயண வேகமான ஒரு மணி நேரத்திற்கு 37-46 கிமீ வேகத்தில் பயணித்தால் கூட சென்னை விளாடிவோசுடாக் கடல்வழியை 10-12 நாட்களில் கடக்க முடியும். "சென்னை மற்றும் உருசியாவின் மிகப்பெரிய துறைமுக நகரமான விளாடிவோசுடாக் இடையே திறக்கப்படவுள்ள இவ்வழி இரண்டு பெரிய துறைமுகங்களுக்கிடையில் இணைப்பு இருப்பதை உறுதி செய்வதால் முக்கியத்துவம் பெற்ற வழியாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chaudhury, Dipanjan Roy (12 July 2018). "Chennai-Vladivostok sea route: India's effort to counter China's OBOR could soon get a big Russian helping hand". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/chennai-vladivostok-sea-route-to-make-it-near-east/articleshow/60486508.cms. 
  2. "Explained: The sea route from Chennai to Vladivostok". The Indian Express (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  3. Roche, Elizabeth (2021-02-14). "Maritime corridor, trade on Shringla's Russia visit agenda". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  4. எம்.குமரேசன். "விளாடிவோஸ்க் - கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு! - ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை?". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18. {{cite web}}: External link in |website= (help)
  5. "சென்னை விளாடிவோசுடாக் கடல்வழி சீனாவின் பட்டுப் பாதைக்குப் போட்டியா". தினமணி. https://www.dinamani.com/india/2019/sep/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D---%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88--%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3229732.html. பார்த்த நாள்: 18 May 2021.