சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சௌக்கார்பேட்டை, தங்கசாலை
கோயில் தகவல்
மூலவர்:சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]
இணையத்தளம்:http://www.ekambareswarartemple.tnhrce.in/index.html

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்பது சென்னை பாரிமுனையில் (ஜார்ஜ டவுன்), உள்ள சிவன் கோவிலாகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கோயில் சௌகார்பேட்டை தங்கசாலை என்ற மிண்ட் சாலையில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்தும் பாரிமுனையிலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி இரண்டு சமண ஆலயங்களும் கந்தசாமி கோயிலும் உள்ளன.[1]

வரலாறு[தொகு]

ஏகாம்பரேஸ்வரர் கோயில் 1680 களில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் துபாஷ் பணியாளரான அலங்கநாத பிள்ளை அவர்களால் கட்டப்பட்டது.[1] இந்த கோயில் மெட்ராஸ் நகரத்தின் 1710 வரைபடத்தில் "அல்லிங்கள் பகோடா" என்று குறிக்கப்பட்டுள்ளது.[2]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோவிலில் மூலவராக ஏகாம்பரநாதரும், அம்மனாக காமாட்சியும் உள்ளனர். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இந்தத் தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் நம்பப்படுகிறது.[3] காமிகம் ஆகமப்படி உள்ளக் கோவிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது.[4] திரிதள விமானமும் ஏழு நிலை இராஜகோபுரமும் கொண்டுள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ஐப்பசி மாதம் பூர நட்சத்திர தினத்தன்று நிகழும் திருக்கல்யாண விழா விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Srinivasachari, C. S. (1939). History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co.
  2. Srinivasachari, Development of the Settlement, pp 24-25
  3. 3.0 3.1 "அருளும் ஐப்பசி பூரத் திருக்கல்யாணம்... சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கோலாகல ஏற்பாடு!". விகடன். https://www.vikatan.com/spiritual/gods/aippasi-poora-thirukalyana-ursavam-at-chennai-ekambareswarar-temple. பார்த்த நாள்: 6 November 2019. 
  4. "அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயில்". தினமலர். https://temple.dinamalar.com/New.php?id=28. பார்த்த நாள்: 6 November 2019.