சு. வேல்முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. வேல்முருகன் (பிறப்பு: டிசம்பர் 26, 1946) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரியிலுள்ள தவளக்குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை சுப்புராயக் கவுண்டர், தாய் செங்கேணி. தமிழில் கல்வியியல், மெய்யியல் முதுகலைப்பட்டங்களைப் பெற்ற இவர் பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாவலர், சொல்லாய்வுச் செல்வர், கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகிகித்திருக்கிறார். இவர் இதுவரை 15 நூல்களைப் படைத்துள்ளார். இவர் எழுதிய "திருவக்கரை வரலாறு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வேல்முருகன்&oldid=3614088" இலிருந்து மீள்விக்கப்பட்டது