சுஜாதா ராம்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா ராம்துரை
சுஜாதா ராம்துரை
வாழிடம்வான்கூவர்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
துறைகணிதம்
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
பிரித்தானிய கொலம்பியா பலகலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்புனித யோசோப் கல்லூரி, பெங்களூர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
ஆய்வு நெறியாளர்இராமன் பரிமளா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அரிபம் சர்மா
அறியப்படுவதுபரிமாற்றம் அல்லாத இவாசாவா கோட்பாடு, இயற்கணித வகைகளின் எண்கணிதம்
விருதுகள்ஐசிடிபி இராமானுஜன் பரிசு (2006)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2004)
அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளை (1997–1998)

சுஜாதா இராம்துரை (Sujatha Ramdorai) என்பவர் கனடாவின் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கனடா ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1][2] முன்னதாக டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினாா்.இவர் இயற்கணித கோட்பாட்டின் மீதான தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இயற்கணித எண் கோட்பாட்டாளர் ஆவார். 2006ஆம் ஆண்டில் கௌரவமான "சர்வதேச இயற்பியல் கோட்பாட்டு மைய இராமானுஜன் பரிசை" வென்ற முதல் இந்தியரும், 2004ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் விஞ்ஞான துறைகளில் மிக உயர்ந்த கௌரவமான விருதான "சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றவா் ஆவார்.

சுஜாதா இராம்துரை 2007 ஆம் ஆண்டு முதல் 2009 வரை தேசிய அறிவு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். தற்போது இவர் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து 2009 ஆம் ஆண்டு முதல் தேசிய அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் கோனிட் சோராவின் ஆலோசனைக் குழுவிலும் இருக்கிறார். [4] புனேவில் உள்ள இந்திய கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு துணைப் பேராசிரியர் பதவி வகித்தார்.

கல்வி[தொகு]

பெங்களூரிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் அவர் தனது இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 1985 ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மூலம் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றாா். பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இராமன் பரிமலாவின் மேற்பார்வையில் 1992 ஆம் ஆண்டு தனது முனைவா் பட்டத்தைப் பெற்றாா். ref>Homepage CV</ref> இவரது ஆராய்சி "உண்மையான மேற்பரப்புகள் மற்றும் உண்மையான வடிவவியலின் விட் குழுக்கள்" என்பதாகும்.

கணித பங்களிப்புகள்[தொகு]

கோட்சு, புக்கியா, கதோ மற்றும் வெனாசோப் ஆகியோருடன் இணைந்து இவாசாவா கோட்பாட்டின் பிரதான உந்துதலின் ஒரு பரிமாற்ற பதிப்பை இவர் உருவாக்கியிருந்தார்.[3] அதன் தோற்றம் ஜப்பானிய கணிதவியலாளரான கென்சிச்சி இவாசாவாவின் "இவாசாவா கோட்பாடு"ன் படைப்புகளில் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Canada, Industry Canada (2012-11-29). "Canada Research Chairs". பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
  2. "Mathematics". www.math.ubc.ca. பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
  3. Interview with Sujatha
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_ராம்துரை&oldid=3709750" இலிருந்து மீள்விக்கப்பட்டது