சீதாவக்கை அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||
சீதாவக்கை அரசு இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டிற் காணப்பட்ட ஓர் அரசாகும். 73 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தாலும் சிங்கள அரச மரபுக்கு மிக முக்கியமான ஒர் அரசாகத் திகழ்ந்தது. சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துக்கேயரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.