சி. தண்டாயுதபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி. தண்டாயுதபாணி
S. Thandayuthapani
 
மாகாணசபை உறுப்பினர்

எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 செப்டம்பர் 2012

அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி

துறை ஆசிரியர்
சமயம் சைவ சமயம்

சிங்காரவேலு தண்டாயுதபாணி (Singaravelu Thandayuthapani, பிறப்பு: 7 ஆகத்து 1950) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தண்டாயுதபாணி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்றவர்.[1] பொருளியலில் பட்டம் பெற்ற பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்றார்.[1]

பணி[தொகு]

தண்டாயுதபாணி பாடசாலை அதிபராகவிருந்து பின்னர் கல்வித்துறைப் பணிப்பாளரானார்.[1][2] கிழக்கு மாகாணத்துக்கான காணி, காணி அபிவிருத்தி, கல்வி, கலாசார அமைச்சின் செயலாளராக 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1]

அரசியலில்[தொகு]

2012 இல் இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2012 செப்டம்பர் 28 இல் இவரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.[1][4] தண்டாயுதபாணியும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய 10 கூட்டமைப்பு உறுப்பினர்களும் 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுபினருமான இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. 
  2. Gurunathan (15 நவம்பர் 2009). 24.html "US Ambassador declares open schools rebuilt by USAID". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/091115/News/nws 24.html. 
  3. "2012/Candidates/Trinco FREV.pdf Preferences". Department of Elections, Sri Lanka.
  4. Satyapalan, Franklin R. (30 செப்டம்பர் 2012). cat=article-details&page=article-details&code title=62691 "Inaugural session of Eastern PC tomorrow". ஐலண்டு. http://www.island.lk/index.php?page cat=article-details&page=article-details&code title=62691. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=சி._தண்டாயுதபாணி&oldid=1685512" இருந்து மீள்விக்கப்பட்டது