சி. எஸ். ஐ. இம்மானுவேல் தேவாலயம், சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயம், சேலம்
சி.எஸ்.ஐ இம்மானுவேல் தேவாலயம், சேலம்
அமைவிடம்ஹஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, சேலம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுதென்னிந்திய திருச்சபை
மரபுஇலண்டன் மறைப்பணி
Architecture
பாணிநவீன கட்டிடக்கலை
நிருவாகம்
மறைமாவட்டம்கோயம்புத்தூர் மறைமாவட்டம்
குரு
ஆயர்திமோதி இரவீந்தர் (2013) முதல்

சி.எஸ்.ஐ இம்மானுவேல் தேவாலயம், சேலம் , இந்தியாவின் தமிழ்நாடு, சேலத்தின் மையப்பகுதியில் சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இந்தத் தேவாலயத்தில் வழிபாடுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

மே 1840 ஆம் ஆண்டு, இலண்டன் மறைப்பணியாளர் சங்கத்தின் செருமானிய மறைப்பணியாளரும், சேலத்தின் அப்போசுதலர் என்று அழைக்கப்படுபவருமான மதிப்பிற்குரிய ஜே.எம் லெக்லர் (மதிப்பிற்குரிய. ஜான் மைக்கேல் லெக்லர் - 1804 - 1861), சேலம் மறைப்பணிகளுக்கான பொறுப்பேதற்கு கோயம்புத்தூரிலிருந்து சேலத்திற்கு வந்தார். [1] :64 அவர் ஏற்கனவே இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் இப்பணியில் இருந்தவர் ஆவார். இதில் நான்கு ஆண்டுகள் திருநெல்வேலியின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய CTE ரீனியசுடன் (1790 - 1838) இணைந்து பணிபுரிந்தார். [2] 1840 ஆம் ஆண்டில் மதி. ஜே.எம். லெக்லர் சேலத்தில் முதன்முதலில் ஒரு தொழில் பள்ளியைத் தொடங்கினார். பிரித்தானிய இந்தியா முழுவதிலும், இந்தப் பள்ளி, இந்தியாவில் தொழில்துறை கல்வியின் முதல் பள்ளி என்று அழைக்கப்பட்டது இதன் மூலம் மதி. ஜே.எம். லெக்லர், இந்தியாவின் தொழில்துறை கல்வியின் தந்தை (ஆங்கிலம்: the father of Industrial education in India) என்றும் அழைக்கப்பட்டார். (சரிபார்க்கப்பட்ட வரலாறு). தொழில்துறை பள்ளியை மேம்படுத்த மதி. ஜே.எம் லெக்லருக்கு மிகத் திறமையான தொழிலாளர்களும் கைவினைஞர்களும் தேவைப்பட்டனர். எனவே அவர் திருநெல்வேலியிலிருந்து திறமையான தொழிலாளர்களை பாளையங்கோட்டையைச் சேர்ந்த கேடசிஸ்ட் ஈ. டேவிட் தலைமையில் அழைத்தார். கேடசிஸ்ட் ஈ. டேவிட், மதி.. ஜே.எம். லெக்லரிடம் திருநெல்வேலியில் நன்கு பயிற்சி பெற்றவர் ஆவார். திருநெல்வேலியைச் சேர்ந்த 30 திறமையான தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுடன் சேலம் வந்தனர். தொழிற்கல்வி பள்ளியில் அவர்களது தொழில்களுக்கு ஏற்ப வேலைகள் வழங்கப்பட்டன. சேலத்தின் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள சேலம் மறைப்பணி வளாகத்தில் இக்குடும்பத்தினர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

தேவாலய குழு[தொகு]

தற்போதைய குழுவில் ஒன்பது ஆயர் குழு (pastorate) மற்றும் நான்கு மாவட்ட சபை (District Council) உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நிர்வாகம்[தொகு]

சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம் கோயம்புத்தூரில் இருந்து இந்திய திருச்சபை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சி.எஸ்.ஐ க்கு மாற்றம்[தொகு]

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய இந்திய அரசாங்கம், அனைத்து அரசாங்க தேவாலயங்களின் உரிமையையும், இந்தியாவில் உள்ள அனைத்து தேவாலய சொத்துக்களுக்கும் முழுமையான உரிமையாளர்களாக, கல்கத்தாவில் உள்ள இந்திய தேவாலய அறங்காவலர்களுக்கு மாற்றியது. இருப்பினும், தேவாலயத்தின் பராமரிப்பு உள்ளூர் மறைமாவட்டத்தின் பொறுப்பாகும். செப்டம்பர் 1947 ஆம் தேதி தென்னிந்திய திருச்சபை உருவானதைத் தொடர்ந்து, கிறித்துவ தேவாலயம் (Christ Church), மைசூர் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. 1950 ஆம் ஆண்டில், இந்தத் தேவாலயம், புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. 1963 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் உள்ள இந்திய தேவாலய அறங்காவலர்களால் நடத்தப்பட்ட தேவாலயங்களின் உரிமையானது தென்னிந்திய திருச்சபை (Church of South India) அறக்கட்டளை சங்கத்திற்கு மாற்றப்பட்டது. இலண்டன் மறைப்பணியாளர் சங்கத்தின் தேவாலயமும் (Chapel) தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது

நிகழ்காலம்[தொகு]

தற்போது, சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயத்தில் ஒரு சமூகக் கூடமும் உள்ளது. சேலத்தின் பழைய ஆங்கிலிகன் கல்லறையும் இந்த தேவாலயத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சமீபத்தில், சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Family research for Keith Arundel Mclusky - 5th Generation descendant of Rev. J.M Lechler.
  2. "Tirunelveli Junction Pastorate". Archived from the original on 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.