மறைமாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறைமாவட்டம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும். டயோசிஸ் (diocese) என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் மறைமாவட்டம் என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயரால் ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு பங்குதளங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.