சிறீ இலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீ இலட்சுமி (Sri Lakshmi ) என்பவர் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய நடிகை ஆவார்.[1] இவர் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[2] இதன் பின்னர் தனது கவனத்தைத் தொலைக்காட்சி தொடர்களில் திருப்பினார்.[3] சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நான்கு நந்தி விருதுகளை இலட்சுமி பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இலட்சுமி ஆந்திரப் பிர்தாசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி தெலுங்கு குடும்பத்தில் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை அமர்நாத் மற்றும் சகோதரர் ராஜேஷ் நடிகர்கள் ஆவார். ராஜேஷின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவார்.

தொழில்[தொகு]

அனுபவம் வாய்ந்த தெலுங்கு நடிகர்/தயாரிப்பாளர் அமர்நாத்தின் மகள் சிறீ இலட்சுமி. இவர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகத் திரையுலகில் நுழைந்தார். ஆரம்பத்தில், இவர் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்கக் கதாபாத்திரங்களைச் செய்தார். நகைச்சுவை வேடங்களில் இவரின் திறமையினைக் கண்ட இயக்குநர் ஜான்டியாலா இவருக்கு ரெண்டு ஜெல சீதாவில் ஒரு சிறிய வேடத்தினை வழங்கினார். இது இவரது வாழ்க்கையை மாற்றியது. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஜண்ட்யாலாவின் நகைச்சுவை படங்களில் நடித்தார். இவர் கே. விசுவநாத்தின் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி நாடகங்களுக்குத் திரும்பினார். இவர் பொதுவாக ஒரேமாதிரியான நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lakshmi". chithr.com. Archived from the original on 2009-09-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  2. "Dancing Her Way Into Films". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  3. "హీరోయిన్ కాక‌పోవ‌డం నా అదృష్టం – శ్రీ ల‌క్ష్మి.. – Andhra Prabha Telugu Daily". Andhra Prabha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_இலட்சுமி&oldid=3686801" இலிருந்து மீள்விக்கப்பட்டது