சிறீபதி மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீபதி மிசுரா
Sripati Mishra
13th உத்தரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
19 July 1982 – 2 August 1984
முன்னையவர்வி. பி. சிங்
பின்னவர்நா. த. திவாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 திசம்பர் 1923
சுல்தான்பூர் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு8 திசம்பர் 2002
(வயது 79)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

சிறீபதி மிசுரா (Sripati Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இயங்கினார். 1980- ஆம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

பிறப்பு[தொகு]

சிறீபதி மிசுரா சுல்தான்பூரில் உள்ள சேசுபூர் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் [1] பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சிறீபதி மிசுரா முதன்முதலில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் அதன் அவைத்தலைவரானார், இந்த அலுவலகத்தில் 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி வரை இருந்தார் [2] 1982 ஆம் ஆண்டு விசுவநாத் பிரதாப் சிங் பதவி விலகல் செய்த பின்னர் இவர் முதலமைச்சரானார் [3] 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார் [4] யோகேந்திர நரேன் இவரது முதன்மை செயலாளராக பணியாற்றினார். [5] பின்னர், 1984 ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிராம அரசியலில் இருந்து மாநிலத்தின் முதல் இடத்தை அடைந்த சில அரசியல்வாதிகளில் சிறீபதி மிசுராவும் ஒருவராவார். .

மேலும், உத்தரபிரதேச வழ்க்கறிஞர்கள் குழுவின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். [6]

இறப்பு[தொகு]

சிறீபதி மிசுரா நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில் காலமானார். [7]

மற்றவை[தொகு]

சிறீபதி மிசுரா பட்டக் கல்லூரி என்ற ஒரு கல்லூரி .உத்தரபிரதேசம், சுல்தான்பூரில் இவரது நினைவாக நிறுவப்பட்டது, தற்போது இந்த கல்லூரி மாவட்டத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shah, Pankaj; Chauhan, Arvind (November 17, 2021). "Mishra: Uttar Pradesh: PM Modi accuses Congress of 'humiliating' its Brahmin CM" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  2. http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/speakers.htm legislativebodiesinindia.nic.in
  3. http://us.rediff.com/news/2007/mar/13uppoll3.htm No UP CM completed full term
  4. "Chief Minister". Archived from the original on 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12. uplegisassembly.gov.in
  5. http://164.100.24.167:8080/members/SG_biodata.asp?code=2 Secretary-General Rajya Sabha Biodata
  6. [1] Do not commercialise legal profession: Judge
  7. [2] Sripati Mishra passes away
  8. http://www.ugc.ac.in/inside/alphareco_college.php?resultpage=3&st=P Colleges - University Grants Commission

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபதி_மிசுரா&oldid=3873110" இலிருந்து மீள்விக்கப்பட்டது