சினாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்கால சினாம்பாக்கள்

சினாம்பா என்பது நடு அமெரிக்காவில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வேளாண்மை முறையாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கில் உள்ள ஏரிகளில் ஆழம் குறைந்த படுகைகளில் பயிர்செய்ய ஏற்ற மண்ணைக் கொண்டு அமைக்கப்பட்டட செவ்வக வடிவிலான பகுதிகள் இம்முறையில் பயிர்செய்ய பயன்படுத்தப்பட்டன. மிதக்கும் தோட்டங்கள் என்று பொதுவாக அறியப்பட்ட இவற்றின் அளவு 30 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமுமாக இருந்தது. சில வேளைகளில் இதனை விடப்பெரியவையும் இருந்தன. இந்தத் தீவுகள் ஆண்டுக்கு முப்போகம் விளையுமளவுக்கு வளம் மிக்கவையாக இருந்தன.

சோளம், பீன்சு, தக்காளி, சிலி மிளகு முதலிய பயிர்கள் சினாம்பாக்களில் முதன்மையாக விளைவிக்கப்பட்டன. சினாம்பா என்ற சொல் மூங்கிலால் ஆன சதுரம் எனப்பொருள் தரும் நகுவாட்டில் சொல்லில் இருந்து தோன்றியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாம்பா&oldid=2220807" இலிருந்து மீள்விக்கப்பட்டது