சித்திரகுப்தர் கோயில்

ஆள்கூறுகள்: 12°50′12″N 79°42′17″E / 12.83667°N 79.70472°E / 12.83667; 79.70472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரகுப்தர் கோயில்
Chitragupta Temple
ஆள்கூறுகள்:12°50′12″N 79°42′17″E / 12.83667°N 79.70472°E / 12.83667; 79.70472
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவு:காஞ்சிபுரம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சித்திரகுப்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:சோழர் அரசர்கள்

சித்திரகுப்தர் கோயில் (Chitragupta temple), காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.

இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Shrine for Chitragupta". www.thehindu.com (ஆங்கிலம்). Apr 18, 2003. Archived from the original on 2003-11-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரகுப்தர்_கோயில்&oldid=3811404" இலிருந்து மீள்விக்கப்பட்டது