சிசிர் பார்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசிர் பார்கி
சிசிர் பார்கி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1967-11-07)7 நவம்பர் 1967
நாக்பூர், மகாராஷ்டிரா, இந்தியா
இசை வடிவங்கள்கஜல், பக்தி பாடல்கள், பஜனைகள், திரைப்பட பாடல்கள்
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், தபேலா
இசைத்துறையில்1989 ம் ஆண்டு முதல்
வெளியீட்டு நிறுவனங்கள்
இணையதளம்shishirparkhie.in

சிசிர் பார்கி, பரவலாகப் பாராட்டப்பட்ட இந்திய கஜல் பாடகர் ஆவார். சிறந்த கஜல் இசைத்தொகுப்பு பிரிவில் மதிப்புமிக்க குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருதுகளுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட அவர் தனது குறிப்பிடத்தக்க கஜல் நிகழ்ச்சிகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களை கவர்ந்துள்ளார். ஷிஷிர் ஒரு திறமையான இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். மேலும் பஜனைகள்,கீதங்கள், பக்தி பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்கள் போன்றவைகளில் திறமை மிகுந்தவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வலுவான இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த சிசிர், தனது தாயார் பிரதிமா பார்கியிடம் இருந்து இளம் வயதிலேயே இசையில் பயிற்சி பெற்றார். இவரது தந்தை ஸ்ரீ ஷரத் ரகுநாத் பார்கி பொகாரோ நகரின் துணைத் தலைமைக் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்து வந்தார். பிரதிமா ராஞ்சியில் உள்ள அகில இந்திய வானொலியில் சுகம் சங்கீத்தை தவறாமல் பாடி வந்தார். சிசிர் தனது ஆறு வயதிலேயே பாட ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் ஸ்ரீ கேதார்நாத் தாக்கூரிடம் தபேலா பயின்றார். தனது பத்தாவது வயதிலிருந்தே அவர் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கி கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். பல்வேறு போட்டிகளில் அவரது சிறந்த பங்கேற்பு பல பாராட்டுகளை வென்றது மற்றும் அவரது பதினைந்து வயதில் பொகாரோ ஸ்டீல் சிட்டியில் அவரது முதல் தனி கஜல் இசை நிகழ்ச்சி அச்சமூகத்திலிருந்து அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தை ஆண்டை முன்னிட்டு அகில இந்திய வானொலியின் சிறப்பு விருதைப் பெற்றார், அங்கு நடைபெற்ற தேசிய இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சிசிர் பொகாரோவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் உயர் படிப்புக்காக நாக்பூருக்கு சென்றார்.

சிசிர் நாக்பூரில் உள்ள ஹிஸ்லாப் கல்லூரியில் பொது அறிவியலில் தனது மேல்நிலைப் பள்ளி கல்வியையும் முடித்தார். பின்னர் அவர் கோண்டியாவில் உள்ள மனோகர்பாய் படேல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் (MIET) எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற சேர்ந்தார், ஆனால் இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு நாக்பூரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர் தனது கஜல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். மேலும் பல வணிக சிறு பாடல்களை இயற்றினார். தூர்தர்ஷனில் இசையமைத்து பாடியது, அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது பின்னர் பல இசை தொகுப்புகளுக்கு வழிவகுத்தது. டாக்டர் நாராயணராவ் மங்ருல்கர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீமதி ரேகா சானே யின் வழிகாட்டுதலின் கீழ் ஹிந்துஸ்தானி குரலிசையிலும் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்ற அவர் அகில் பாரதிய கந்தர்வ மகாவித்யாலயாவில் சங்கீத விசாரத் பட்டப்படிப்பை முடித்தார்.

கஜல் இசைத்தொகுப்புகள்[தொகு]

1. அஹ்டெராம் - டி-சீரிஸில் (2008) புகழ்பெற்ற கவிஞர்களுக்கு அஞ்சலி [1]

2. டி-சீரிஸில் ஒன்ஸ் மோர் கசல்ஸ் [2] (2009)

3. ரூமானியத் [3] - மிஸ்டிகா இசையில் காதல் மற்றும் ஏக்கத்தின் கஜல்கள் (2011)

4. குலுஸ் [4] - டி-சீரிஸ் (அக் 2012) இல் கனவுகள், ஆசைகள் மற்றும் விதியின் கசல்கள்

5. ஆதிஷ் தா அஃப்தாப் தா [5] - ஜக்ஜித் சிங் அஞ்சலி கஜல் தனிப்பாடல் (அக் 2012)

6. சியாஹத் [6] - சரேகமவில் உணர்ச்சிகளின் வழியாக ஒரு பயணம் (ஜூன் 2013)

7. டைம்ஸ் இசையில் ஆஷ்னாய் [7] (நவம்பர் 2014)

8. டைம்ஸ் இசையில் குர்பாத் [8] (நவம்பர் 2016)

9. விராசத் - தி லெகசி ஆஃப் லெஜெண்ட்ஸ் [9] டைம்ஸ் இசையில் (பிப்ரவரி 2020)

10. ரெட் ரிப்பன் என்டர்டெயின்மென்ட்டில் கஜல் அப்னி சுனாதா ஹூன் (செப்டம்பர் 2020)

11. ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட்டில் க்யா கோனா கியா பானா (ஜனவரி 2022)

பக்தி மற்றும் ஆன்மீக இசைத்தொகுப்புகள்[தொகு]

  1. மஹிமா சத்குருநாத் கி டி-சீரிஸ்
  2. போலோ ஜெய் சியா ராம் டி-சீரிஸ்
  3. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா கோரடி (அமிர்தவாணி) டி-சீரிஸ்
  4. தேரே நாம் அனேக் தூ ஏக் ஹெ ஹை டி-சீரிஸ்
  5. அவதார் மெஹர் பாபா கி அமர் கதா டி-சீரிஸ்
  6. ஸ்ரீ சாய் ஸ்மரன் ஸ்துதி பாத் டி-சீரிஸ்
  7. ராஹ் சாய் நே சச்சி திகாயீ ஹை டி-சீரிஸ்
  8. ஹம் பாரத் கி ஷான் ஹை டி-சீரிஸ்
  9. புத்த வந்தனா கரு (மராத்தி) டி-சீரிஸ்
  10. ஷீல் சுகந்தா (மராத்தி) டி-சீரிஸ்
  11. பிரதிபிம்பா கிராந்திசூரியாச்சே(மராத்தி) டி-சீரிஸ்
  12. ஸ்ரீ கஜானன் மகாராஜ் அமிர்தவாணி வீனஸ் ரெக்கார்ட்ஸ் & டேப்ஸ்
  13. அன்னயோக்- போஜன் மந்திரங்கள் டைம்ஸ் இசை
  14. இந்தி டைம்ஸ் இசையில் கீத் கீதா Mp3 முழுமையான பகவத் கீதை
  15. தேவி மாதா, பிஹான் இசை
  16. Aao Chalein Koradi VCD Sampoorna Koradi Devi Yatra Darshan T-Series
  17. பிரபு கே மங்கல் கன் காவோ VCD R -தொடர்
  18. அப் மேரி ஆவாஸ் சுனோ R- தொடர்
  19. உத கத்யா அருணோதய ஜாலா ஆர்- தொடர் (மராத்தி)
  20. மேரா சக்ரதர்- கிருஷ்ணா இசை
  21. தம்மக்ராந்தி (மராத்தி)
  22. மானவ் தர்மின் சத்குரு மஹிமா
  23. மானவ் தர்மின் ஸ்ரீ ஹன்ஸ் சாலிசா
  24. தரகடே வலாலி துஜ்யா கௌதமாச்சி பவுலே (மராத்தி) டி-சீரிஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shishir Parkhie Ahteraam - Google Search".
  2. "Shishir Parkhie Once More - Google Search".
  3. "Shishir Parkhie Roomaniyat - Google Search".
  4. "Khulus | T-Series". www.tseries.com. Archived from the original on 2013-02-17.
  5. http://www.cdbaby.com/cd/shishirparkhie
  6. "Shishir Parkhie Siyahat - A Journey Through Emotions - Google Search".
  7. "Shishir Parkhie Aashnaai - Google Search".
  8. "Shishir Parkhie Qurbat - Google Search".
  9. "Shishir Parkhie Virasat - the Legacy of Legends - Google Search".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிர்_பார்கி&oldid=3667522" இலிருந்து மீள்விக்கப்பட்டது