சாஸ்தார் கோயில், கன்னங்காரக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஸ்தார் கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் கன்னங்காரக்குடி என்னும் இடத்தில் உள்ள ஒரு ஐயனார் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

திருமயத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கன்னங்காரக்குடி என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சாஸ்தார் ஐயனார். இறைவி பூரணி, புஷ்கலை.[1] இக்கோயில் அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. 1954 மற்றும் 1996இல் இக்கோயிலின் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. [2]

சிறப்பு[தொகு]

கண்ணன் என்ற பக்தருக்காக குடிகொண்ட கோயில். மனோவியாதி, பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்வர்கள் இங்கு ஏழு நாள் முதல் ஒரு மண்டலம் தங்கி, குளத்தில் நீராடி இவரை வழிபட்டால் அவற்றிலிருந்து விடுபடுவதாகக் கூறப்படுகிறது.[1]

திறந்திருக்கும் நேரம்[தொகு]

காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 5.30 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும். பங்குனி மாதத்தில் பங்குனித் திருவிழா 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது.[1] நவராத்திரி, சிவராத்திரி விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
  2. 2.0 2.1 Sree Dharma Sastha, Kannankarankudi