சல்பேட்டு மேலோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சல்பேட்டு மேலோடு (Sulfate crust) என்பது எரியும் நிலக்கரி குப்பைகள் மற்றும் தொடர்புடைய தளங்களின் மத்திய அச்சுப் பகுதிகளில் காணப்படும் ஒரு மண்டலம் ஆகும். முக்கியமாக கோதோவிகோவைட் மற்றும் மில்லோசெவிக்கைட்டு போன்ற நீரிலி சல்பேட்டு தாதுக்கள் இம்மண்டலத்தில் உள்ளன. வெளிப்புற மண்டலத்திலுள்ள கனிமங்கள் எளிதில் நீரேற்றம் அடைந்து திசெர்மிகைட் மற்றும் அலூனோகென் போன்ற தாதுக்கள் உருவாகின்றன. அமோனியா, கந்தக டிரையாக்சைடு போன்ற நிலக்கரி வழிப்பெறுதி வாயுக்கள் வளிமண்டலத்திற்குள் செல்ல முடியாத நிலையில் Al3+, Fe3+, Ca2+ போன்ற நேர்மின் அயனிகளின் மூலங்களான மாக்கற்கள், பாறைப் பொருட்களுடன் 600 பாகை செல்சியசு வெப்பநிலையிலும் கூட இடைவினைபுரிவதால் இம்மண்டலம் உருவாகிறது [1][2][3].

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srebrodolskiy B. I. 1989: Tainy Sezonnykh Mineralov. Nauka, Moscow
  2. Jambor J. L. and Grew E. S. 1991: New mineral names. American Mineralogist, 76, pp. 299-305
  3. Sokol E. V., Maksimova N. V., Nigmatulina E. N., Sharygin V. V. and Kalugin V. M. 2005: Combustion metamorphism. Publishing House of the SB RAS, Novosibirsk
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பேட்டு_மேலோடு&oldid=2956566" இலிருந்து மீள்விக்கப்பட்டது