சர்வ்ராச்சு சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வ்ராச்சு சிங்
Sarvraj Singh
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை (இந்தியா)
பதவியில்
1999–2009
முன்னையவர்இராச் வீர் சிங்
பின்னவர்மேனகா காந்தி
தொகுதிஆம்லா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகத்து 1952 (1952-08-14) (அகவை 71)
பரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சலோனி சிங் (1978)
பிள்ளைகள்2
வாழிடம்பரேலி
As of 17 செப்டம்பர், 2006

சர்வ்ராச்சு சிங் (Sarvraj Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குன்வர் சர்வ்ராச்சு சிங் என்ற பெயராலும் அறியப்பட்டார். 1952 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமாச்வாதி கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆம்லா மக்களவைத் தொகுதி போட்டியிட்டு இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதினொன்றாவது, பதின்மூன்றாவது மற்றும் பதினான்காவது மக்களவைகளில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமாச்வாதி கட்சியின் உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றார்..[2][3] சலோமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் குழந்தைகள் இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographical Sketch - Member of Parliament - XI Lok Sabha - SINGH SH. KUNWAR SARVRAJ". www.indiapress.org.
  2. "Fourteenth Lok Sabha - State wise Details - Uttar Pradesh". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
  3. "Lok Sabha elections: Ex-SP MP Sarvraj Singh joins Congress, gets Aonla ticket | Bareilly News".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வ்ராச்சு_சிங்&oldid=3827640" இலிருந்து மீள்விக்கப்பட்டது