சர்மிளா போசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்மிளா போசு
பிறப்பு1959 (அகவை 64–65)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்பிரைன் மாவ்ர் கல்லூரி
ஆர்வர்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆர்வர்டு கென்னடி பள்ளி
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

சர்மிளா போசு ( Sarmila Bose ) ஓர் இந்திய-அமெரிக்கப் பத்திரிகையாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். இவர், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் மூத்த ஆராய்ச்சி கூட்டாளியாக பணியாற்றியுள்ளார்.[1] வங்காளதேச விடுதலைப் போர் பற்றிய டெட் ரெக்கனிங்: மெமரீஸ் ஆஃப் தி 1971 பங்களாதேஷ் வார் என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சர்மிளா போசு இந்தியாவின் தேசிய அரசியலில் விரிவான ஈடுபாடு கொண்ட வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போசின் பேத்தியும், தேசியவாதியான சரத் சந்திர போசின் பேத்தியும், முன்னாள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ண போசு மற்றும் குழந்தை நல மருத்துவர் சிசிர் குமார் போசின் மகளும் ஆவார் .

சர்மிளா போசு 1959 இல், அமெரிக்க மாசச்சூசெட்சு மாநிலத் தலைநகரம் பாஸ்டனில் பிறந்தார். ஆனால் இந்தியாவின் கொல்கத்தாவில் வளர்ந்தார். அங்கு இவர் பெண்களுக்கான நவீன உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். [4][5]

தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா திரும்பினார். பிரைன் மாவ்ர் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், ஆர்வர்டு கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1][4]

முனைவர் பட்டத்திற்குப் பிறகு, ஆர்வர்டு பல்கலைக்கழகம், வார்விக் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம், டாட்டா சமூக அறிவியல் கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.[4] இவர் வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான பத்திரிகையிலும் பணியாற்றியுள்ளார்.[4][5]

பணிகள்[தொகு]

டெட் ரெக்கனிங்: மெமரீஸ் ஆஃப் தி 1971 பங்களாதேஷ் வார் என்ற தனது புத்தகத்தில், சர்மிளா 1971 வங்காளதேசப் போரில் இரு தரப்பினரும் அட்டூழியங்களில் ஈடுபட்டதகக் கூறுகிறார். ஆனால் அட்டூழியங்கள் பற்றிய நினைவுகள் "வெற்றி பெற்றவர்களின் கதைகளால் ஆதிக்கம் செலுத்துகின்றன" என்று கூறுகிறார். இந்திய மற்றும் வங்காளதேச "புராணங்கள்" மற்றும் "மிகைப்படுத்தல்கள்" வரலாற்று ரீதியாகவோ அல்லது புள்ளிவிவர ரீதியாகவோ நம்பத்தகுந்தவை அல்ல. புத்தகம் மேற்கு பாக்கித்தானியப் படைகளை விடுவிக்கவில்லை என்றாலும், இராணுவ அதிகாரிகள் "போர் மரபுகளுக்குள் ஒரு வழக்கத்திற்கு மாறான போரைச் செய்ய தங்களால் இயன்றதைச் செய்யும் சிறந்த மனிதர்களாக மாறினர்" என்று கூறுகிறது. இந்த புத்தகம் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் நயீம் மொகைமென் என்பவரால் பிபிசி[2] மற்றும் எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி[6] ஆகியவற்றுக்கு அளித்த பேட்டியில் வரலாற்று சார்பு காரணமாக விமர்சிக்கப்பட்டது. நயீம் மொகைமென், ஊர்வசி புட்டாலியா மற்றும் ஸ்ரீநாத் ராகவன் ஆகிய மூன்று விமர்சகர்களுக்கு இவர் பதிலளித்துள்ளார்.[7]

சொந்த வாழ்க்கை[தொகு]

இந்திய இசையில் பயிற்சி பெற்ற சர்மிளா போசு கொல்கத்தாவில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.[4][5]

இவரது சகோதரர் சுமந்திர போசு, இலண்டன் பொருளியல் பள்ளியில் கற்பிக்கிறார்.[8][9] இவரது சகோதரர் சுகதா போசு[10] அரசியலாளர் மற்றும் பேராசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Oxford University Faculty Bio". Archived from the original on 11 July 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  2. 2.0 2.1 Lawson, Alastair (16 June 2011). "Controversial book accuses Bengalis of 1971 war crimes". BBC. https://www.bbc.co.uk/news/world-south-asia-13417170. பார்த்த நாள்: 30 December 2013. 
  3. Sarmila Bose, Myth-busting the Bangladesh war of 1971, Al Jazeera, 9 May 2011.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Bio". Sarmila Bose (in ஆங்கிலம்). 2015-02-08. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  5. 5.0 5.1 5.2 Duquette, Jonathan (2019-07-01). "Interview with Dr Sarmila Bose". The Woolf Blog (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  6. Naeem Mohaiemen (2011-09-03). "Flying Blind: Waiting for a Real Reckoning on 1971". Economic & Political Weekly 46 (36): 40–52. https://www.epw.in/journal/2011/53/discussion/dead-reckoning-response.html. பார்த்த நாள்: 2015-03-19. 
  7. Bose, Sarmila (2011-12-31). "'Dead Reckoning': A Response". Economic & Political Weekly 46 (53): 76–79. https://www.epw.in/journal/2011/36/special-articles/flying-blind-waiting-real-reckoning-1971.html. பார்த்த நாள்: 2015-03-19. 
  8. Anjali Puri, Lunch With BS: Sugata Bose, Business Standard, 4 March 2016.
  9. Bhaumik, Subir (29 April 2011). "Book, film greeted with fury among Bengalis". aljazeera. http://www.aljazeera.com/indepth/features/2011/04/2011429174141565122.html. பார்த்த நாள்: 21 December 2013. 
  10. "Election results: Netaji Subhash Chandra Bose's grandnephew Sugata Bose wins from Bengal's Jadavpur". Times of India.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிளா_போசு&oldid=3894608" இலிருந்து மீள்விக்கப்பட்டது