சர்தார் இந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் இந்தர் சிங்Sardar Inder Singh
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சர்தார் இந்தர் சிங் (Sardar Inder Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1890-1983 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கி 1983 ஆம் ஆண்டு இவர் இறக்கும் வரை முன்னணி சீக்கிய இந்திய தொழிலதிபராகத் திகழ்ந்தார். கான்பூரில் உள்ள சிங் பொறியியல் பணிகள் நிறுவனம் என்ற இந்தியாவின் முதல் எஃகு மீள் சுருள் ஆலையை நிறுவியதன் மூலம் இந்தியாவில் எஃகு மீள் சுருள் தொழிற்துறையை நிறுவினார். இதைத் தவிர மேலும் பல தொழில்துறை அலகுகளையும் நிறுவினார். வட இந்தியாவின் மிகப்பெரிய இரயில் பாரவண்டி தொழிற்சாலை, சிங் பாரவண்டி தொழிற்சாலை ஆகியவற்றை அமைத்ததன் மூலம் பல்வகைப்படுத்தினார். இந்திய இரயில்வேக்கு இரயில்பாதை இணைப்பு பட்டைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் விநியோகியாகவும் ஆனார். சர்தார் இந்தர் சிங் உத்தரப் பிரதேச வணிகர் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், தலைவராகவும், வட இந்தியாவின் முதலாளிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 1946 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை அமிர்தசரசில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[1][2]

2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்டு திரைப்படம் இவருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையை அடிப்படையாகக் கொண்டது. [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sardar Inder Singh – The Biggest Ever Raid In History Of India". Archived from the original on 30 November 2022.
  2. "Income Tax officials raid Kanpur businessmen properties, unearth enormous haul".
  3. "A sequel to Ajay Devgn's Raid" (in ஆங்கிலம்). 2019-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  4. "Raid movie review: Ajay Devgn, Ileana D'Cruz's film is repetitive and preachy" (in ஆங்கிலம்). 2018-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_இந்தர்_சிங்&oldid=3816506" இலிருந்து மீள்விக்கப்பட்டது