குறுக்குக் குற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wooden ties are used on many traditional railways. In the background is a track with concrete ties.

குறுக்குக் குற்றி அல்லது குறுக்குத் தாங்கி (வடக்கு அமெரிக்காவில் railroad tie/railway tie அல்லது ஐரோப்பாவில் railway sleeper) தொடர்வண்டிப் போக்குவரத்தில் இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் மரத்தால் அல்லது காங்கிறீற்றால் ஆன செவ்வக வடிவிலமைந்த தாங்கிகளாகும். பொதுவாக தண்டவாளங்களுக்கு செங்குத்தாக இடப்படும் இந்தக் குற்றிகள் வண்டி பாரத்தை கீழேயுள்ள சரளைக் கற்களுக்கும் பதப்படுத்தப்பட்ட நிலப் பரப்பிற்கும் மாற்றுகிறது. மேலும் தண்டவாளங்களை இறுகப் பிணைத்தும் அகலப்பாட்டை, குறுகிய பாட்டை, மீட்டர் பாட்டை போன்ற வரையறுக்கப்பட்ட சரியான அளவையில் தண்டவாளங்களுக்கிடையேயான தொலைவை பராமரித்தும் சிக்கலற்ற தொடர்வண்டி இயக்கத்திற்கு அடி கோலுகின்றன.

வழமையாக மரத்தால் உருவாக்கப்பட்ட குற்றிகள் அண்மைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முன்தகைப்புக் காங்கிறீற்றால் உருவாக்கப்படுகின்றன. இரும்பினால் ஆன குற்றிகள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம்நிலை வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.நெகிழிக் கலவைகளால் ஆனவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்குக்_குற்றி&oldid=1370258" இருந்து மீள்விக்கப்பட்டது