சர்தாஜ் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தாஜ் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை (இந்தியா)
பதவியில்
1989–1999
முன்னையவர்அர்பால் சேதி
தொகுதிஓசங்காபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-05-26)26 மே 1940
உஜ்ஜைன், குவாலியர் அரசு, இந்தியா
இறப்பு12 அக்டோபர் 2023(2023-10-12) (அகவை 83)
போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
துணைவர்குர்மீத் கவுர்
பிள்ளைகள்3
As of 22 September, 2006
மூலம்: [1]

சர்தாஜ் சிங் சத்வால் (Sartaj Singh Chhatwal) (26 மே 1940 - 12 அக்டோபர் 2023) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மத்திய பிரதேச அரசாங்கத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2004-ஆம் ஆண்டில் இந்திய மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் நான்கு முறை மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சர்தாஜ் சிங் நீண்டகால பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இருந்தார் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். ஆனால், 8 நவம்பர் 2018 அன்று, இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். [1] இவர் 16 மே 1996 முதல் சூன் 1, 1996 வரை மத்திய அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் [2]

சர்தாஜ் சிங் தனது 83வது வயதில் 12 அக்டோபர் 2023 அன்று போபாலில் இறந்தார் [3]

மேற்கோள்கள்[தொகு]