சரிகா தேவேந்திர சிங் பாகேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிகா தேவேந்திர சிங் பாகேல்
பிறப்பு9 ஆகத்து 1980 (1980-08-09) (அகவை 43)
இட்டாவா, உத்தரப் பிரதேசம்
பிறப்பிடம்இந்தியர்
தொழில்(கள்)அரசியல்வாதி

சரிகா தேவேந்திர சிங் பாகேல் எனும் சரிகா சிங் (Sarika Devendra Singh Baghel-பிறப்பு 9 ஆகத்து 1980)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியினைச் சார்ந்தவர். இக்கட்சியின் வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாத்ராஸ் மக்களவைத் தொகுதிக்கு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதினைந்தாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.

இவர் மீண்டும் போட்டியிட ஆக்ரா மக்களவை வேட்பாளராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை முதியவர் என்று இவரது கணவர் கூறியதால், இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். [3]

குடும்பம்[தொகு]

சரிகா தேவேந்திர சிங் பாகேல் மகேந்திர சிங் மற்றும் சிறீமதிக்கு மகளாகப் பிறந்தார். சகுந்தலா தேவி மற்றும் இவர் தேவேந்திர சிங் ஆர்யா பாகேலை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார். சரிகா முதுநிலை பட்டாதாரி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fifteenth Lok Sabha: Members Bioprofile". Lok Sabha.
  2. "UP puts some fresh faces in Parliament". http://www.expressindia.com/latest-news/up-puts-some-fresh-faces-in-parliament/462653/. 
  3. "SP Candidate Sarika Baghel expelled from Party for calling Mulayam Old". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]