சந்த்பீபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்த்பீபி (ஆங்கிலம்: Chandbibi; வங்காளம்: (চাঁদবিবি) என்பது வங்காளத்தினர் வழிபடும் இந்து தெய்வம் மற்றும் நாட்டுப்புற தெய்வம் ஆகும். இத்தெய்வத்தினை ஓலாதேவி (வாந்திபேதி தெய்வம்), அஜ்கைபீபி, ஜோலாபீபி, பஹதாபீபி, ஆசன்பீபி மற்றும் ஜெதுனேபீபி ஆகிய தெய்வங்களுடன் இணைந்து வழிபடப்படுகிறது.

இந்த ஏழு தெய்வங்களும் பண்டைய வேத சமயத் தெய்வங்களின் மாற்று வடிவங்கள் என்று நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் நம்புகின்றனர்.[1] சிந்துவில் அமைந்துள்ள சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமான மொகெஞ்சதாரோவில் காணப்படும் ஒரு சுடுமண் பாண்ட நினைவுச்சின்னத்தால் இவர்களின் கூட்டு வழிபாடு வரலாற்றுக்கு முந்தைய காலச் சாட்சியமளிக்கிறது. இதில் ஏழு பெண்கள் ஒன்றாக நிற்கும் படம் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mandal, Paresh Chandra (2012). "Oladevi". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்பீபி&oldid=3655464" இலிருந்து மீள்விக்கப்பட்டது